அரசு அலுவலகங்களில் ‘சாட்ஜிபிடி’, ‘டீப்சீக்’ பயன்படுத்த தடை… காரணம் என்ன?

ற்போதைய காலகட்டத்தில் பெட்டிக்கடை முதல் பெரு நிறுவனங்கள் வரை டிஜிட்டல் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி விட்ட நிலையில், அடுத்தகட்டமாக AI எனப்படும் செயற்கை தொழில்நுட்ப செயலிகளின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.

இந்த ஏஐ தொழில்நுட்பத்தில் ஓபன் ஏஐ – சாட்ஜிபிடி, கூகுள் – ஜெமினி போன்ற அமெரிக்க நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், கடந்த வாரம் சீனா அறிமுகப்படுத்திய புதிய ஏஐ மாடலான ‘டீப்சீக்’ (Deepseek), இந்த அமெரிக்க நிறுவனங்களை அலறவிட்டுள்ளது.

சீனாவின் டீப்சீக் வெளியானதிலிருந்து, AI உலகில் அது ஒரு கேம்-சேஞ்சராக பார்க்கப்படுகிறது. செயல்திறன் அடிப்படையில் சாட்ஜிபிடி,ஜெமினி மற்றும் கிளாட் (ChatGPT, Gemini, and Claude ) போன்ற பிற முன்னணி AI மாடல்களை விஞ்சியுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

டீப்சீக் இப்படி ஒரு கடும் போட்டியாளராக உருவெடுத்ததைத் தொடர்ந்து, அப்போட்டியை சமாளிக்கும் விதமாக ஓபன் ஏஐ நிறுவனம் சாட் ஜிபிடியில் டீப் ரிசர்ச் (Deep Research) என்ற ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி எந்த ஒரு தலைப்பில் கேள்வி கேட்டாலும், மிக ஆழமான ஆய்வறிக்கைகளை இந்த டீப் ரிசர்ச் பயனர்களுக்கு தயார் செய்து கொடுக்கும் என ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.

இந்த வகையிலான ஏஐ செயலிகள் டேட்டா அனாலிசிஸ் எனப்படும் தரவு பகுப்பாய்வுக்கு மிகவும் உதவுகின்றன. நிதித்துறை, அறிவியல் மற்றும் கொள்கைகள் சார்ந்த துறைகளில் பணியாற்றக்கூடிய தொழில் நிபுணர்கள் ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் தங்களுக்கு விரிவான மற்றும் ஆழமான ஆய்வு அறிக்கைகள் வேண்டும் எனும்போது இந்த டீப் ரிசர்ச் வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும். அந்த வகையில், இந்த செயலி அரசு துறைகளில் பணியாற்றுபவர்களால் கூட பரவலாக பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மத்திய அரசு அலுவலகங்களில் பயன்படுத்த தடை

இந்த நிலையில், இந்தியாவிலும் மத்திய நிதி அமைச்சக அலுவலகங்களில் ChatGPT மற்றும் DeepSeek போன்ற AI கருவிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அதன் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசாங்க ஆவணங்கள் மற்றும் தரவுகளின் ரகசியத்தன்மைக்கு இந்த செயலிகள் ஏற்படுத்தும் ஆபத்துகள் காரணமாக, நிதி அமைச்சகம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

காரணம் என்ன?

அண்டை நாடுகள் மற்றும் எதிரி நாடுகளை உளவு பார்ப்பது தொடர்பாக சீனா மீது அதிக அளவிலான குற்றச்சாட்டுகள் உண்டு. அதனாலேயே சீனா அறிமுகப்படுத்திய சில விளையாட்டு செயலிகளுக்கு (Apps) கூட பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழ்நிலையில், சீனாவின் மீது ‘டீப்சீக்’ ஏஐ செயலி மீதும் பல நாடுகள் சந்தேக கண்கொண்டு பார்க்கின்றன. தங்கள் நாட்டின் ரகசிய தகவல்களை ‘டீப்சீக்’ செயலி திருடிக்கொள்ள வாய்ப்பு உண்டு எனக் கருதுகின்றன. மேலும், கேள்விகளைக் கேட்பதற்கான Prompt ஐ உள்ளீடு செய்யும்போது அந்த நாட்டைப் பற்றிய முக்கிய தகவல்கள் பரிமாறப்பட்டால், அது ஆபத்தாக மாறிவிடும் எனக் கருதப்படுகிறது.

இதனை கருத்தில்கொண்டே கடந்த வாரம், டச்சு நாட்டின் தனியுரிமை கண்காணிப்பு அமைப்பான AP,டீப்சீக் செயலியின் தனியுரிமைக் கொள்கைகள் குறித்து, குறிப்பாக இந்த செயலி பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது குறித்து விசாரணையைத் தொடங்குவதாக அறிவித்தது.

டீப்சீக் பிரபலமடைந்ததிலிருந்து, உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள் அதன் தனியுரிமைக் கொள்கைகள் தொடர்பாக ஆய்வு செய்து வருவது அதிகரித்து வருகிறது.
தங்கள் நாட்டின் தரவு பாதுகாப்பு ஆணையத்தால் எழுப்பப்பட்ட தனியுரிமைக் கவலைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால், இத்தாலியில் டீப்சீக் செயலி ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்றும் இதே காரணங்களுக்காக அனைத்து அரசாங்க சாதனங்களிலிலும் ( devices ) டீப்சீக் செயலியை தடை செய்வதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

மேற்கூறிய நாடுகளின் இத்தகைய நடவடிக்கைகளைத் தொடர்ந்தே, மத்திய அரசும் மேற்கூறிய முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

有氧so young > 揮灑汗水,提高代謝量. Tonight is a special edition of big brother. 인기 있는 프리랜서 분야.