பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை: 2 மசோதாக்கள் விவரம்!

மிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கிய நிலையில், நான்காவது நாளான இன்று பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கான இரண்டு சட்டத்திருத்த மசோதாக்களை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

2025-ம் ஆண்டு குற்றவியல் சட்டங்கள், பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற சட்ட திருத்த மசோதாவை அவர் தாக்கல் செய்தார். அதில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான சிறை தண்டனை விதிக்கும் வகையிலும் திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன.

மசோதாக்களைத் தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ” 2023 ஆம் ஆண்டு பி.என்.எஸ். சட்டம் தமிழகத்துக்கு பொருந்தும் வகையில் 2025 ஆம் ஆண்டு குற்றவியல் சட்டங்கள் (தமிழ்நாடு திருத்த சட்டம்) என்று அழைக்கப்படும். இதன்படி குற்றம் சாட்டப்பட்ட நபர் பிணையில் வெளியே வர முடியாது.

மரண தண்டனை

12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் 18 வயதுக்கு உள்பட்ட இளம்பெண்கள் மற்றும் பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை வன்புணர்ச்சி செய்பவர்களுக்கு ஆயுள் காலத்திற்கும் கடுங்காவல் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். வன்புணர்ச்சி மற்றும் மரணத்தை விளைவிக்கும் அல்லது காயத்தை ஏற்படுத்தும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும் ஆயுள் கால சிறை தண்டனை மற்றும் மரண தண்டனை கிடைக்கும்.

கூட்டு வன்புணர்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் காலத்துக்கும் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படும். 18 வயதுக்கு உள்பட்ட பெண்களிடம் கூட்டு வன்புணர்ச்சியில் ஈடுபட்டால் ஆயுள் காலத்திற்கும் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும். சம்பந்தப்பட்ட நபரின் இயற்கையான ஆயுள் காலம் வரையில் நீட்டிக்கப்படும். மேலும் அபராதம், மரண தண்டனை ஆகியவையும் விதிக்கப்படும்.

மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கும் மரண தண்டனை அல்லது ஆயுள்கால சிறை தண்டனை விதிக்கப்படும். வன்புணர்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு குறையாத கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ஆயுள் கால சிறை ஆகியவையும் விதிக்கப்படும். காவல்துறை அலுவலர், அரசு பணியாளர், ஆயுதப்படை உறுப்பினர், சிறைச் சாலைகள், தடுப்பு காவல் இல்லம் ஆகியவற்றில் பெண்கள் அல்லது குழந்தைகள் குறிப்பிட்ட நிறுவனத்தின் பணியாளர்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்டாலோ, அதிகாரம் மிக்க நபர் அல்லது நெருங்கிய உறவினர்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்டாலோ 20 ஆண்டுகளுக்கு குறையாத கடுங்காவல் சிறை தண்டனை, ஆயுள் காலத்துக்கும் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

பாதிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால்…

குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலும், கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் தாக்குதல் அல்லது பலத்தை பயன்படுத்தினாலும் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும்.

பெண்களின் ஆடைகளை அகற்றி தாக்குதலில் ஈடுபடுபவர்கள், மறைந்திருந்து பார்த்து பாலியல் கிளர்ச்சியில் ஈடுபடுபவர்கள் ஆகியோருக்கும் 5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை கிடைக்கும்.

பெண்களை பின் தொடர்ந்து சீண்டுபவர்களுக்கும் 5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை வழங்கப்படும். ஆசிட் வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டு கொடுங்காயத்தை ஏற்படுத்துபவர்களுக்கு ஆயுள் தண்டனை, கடுங்காவல் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். ஆசிட்டை வீசுபவர்களுக்கும், வீச முயற்சிப்பவர்களுக்கும் 10 ஆண்டுகளுக்கும் குறையாத மற்றும் ஆயுள் காலம் வரை சிறை தண்டனை கிடைக்கும். மேற்கண்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் ஜாமினில் வெளிவர முடியாது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்புணர்ச்சி மற்றும் பாலியல் குற்றங்கள் ஆகியவற்றில் சட்டம் முழு வேகத்துடன் கையாளப்படுவதற்கும், அது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் விதமாகவும் இதுபோன்ற தண்டனைகள் வழங்கப்படுவது அவசியமாகிறது. இதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களை உறுதியாக தடுக்க இந்த சட்டத் திருத்தம் முன் மாதிரியாக இருக்கும் என்று மாநில அரசு நம்புகிறது” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ahmet hikmet ÜÇiŞik tÜbİtak’ta seminer verdi. So if you want to charter your luxury yacht with a crew or bareboat sailing yacht, be sure to. Er min hest overvægtig ? tegn og tips til at vurdere din hests vægt hesteinternatet.