ஒரே வங்கியின் பல கிரெடிட் கார்டுகளை வைத்திருக்கலாமா?

ம்மில் பலர் வெவ்வேறு நோக்கங்களுக்காக பல்வேறு கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் இந்த கிரெடிட் கார்டுகள் வெவ்வேறு வங்கிகளுடையதாக இருக்கும். ஆனால் சிலர் ஒரே வங்கியின் வெவ்வேறு கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த விரும்புகிறார்கள். ஒருவர் அவரது பழைய கிரெடிட் கார்டை வைத்திருக்கும் போது அப்கிரேடு செய்ய விரும்பலாம். ஆனால் பழைய கார்டு உடனடியாக மூடப்படுவதைத் தவிர்க்க இரண்டு கார்டுகளையும் தொடர்ந்து வைத்திருக்க நினைத்திருக்கலாம்.

சரி, இப்படி ஒரே வங்கியின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவது பயனுள்ளதாக இருக்குமா என்றால், ஆமாம் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். இவ்வாறு ஒரே வங்கியின் வெவ்வேறு கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துஅவ்து பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இருப்பினும், ஒரே வங்கியிலிருந்து பல கிரெடிட் கார்டுகளைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், தேவையான விவரங்களைத் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.

பலன்கள் என்ன?

பயணம், உணவு, ஷாப்பிங் மற்றும் எரிபொருள் போன்ற குறிப்பிட்ட செலவு வகைகளுக்கு ஏற்ப வங்கிகள் பல்வேறு கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. ஒரே வங்கியில் இருந்து இரண்டு கார்டுகளை வைத்திருப்பதன் மூலம், ஒவ்வொரு கார்டையும் அதன் குறிப்பிட்ட வகைக்காகப் பயன்படுத்தி உங்கள் ரிவார்ட்ஸ் பாயின்ட்டுகளை அதிகரிக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒரு கார்டு பயணத்திலும் மற்றொன்று உணவருந்தும்போதும் அதிக ரிவார்டுகளை வழங்கினால், உங்களுக்கான ஆதாயத்தை அதிகரிக்க அவற்றைத் தாராளமாக பயன்படுத்தலாம்.

நிர்வகிப்பது எளிமை

ஒரே வங்கியிலிருந்து பல கிரெடிட் கார்டுகளை நிர்வகிப்பது மிகவும் வசதியாக இருக்கும். பல வங்கிகள் ஒரே ஆன்லைன் வங்கித் தளத்தை வழங்குகின்றன. அதில், நீங்கள் உங்கள் கணக்குகள் அனைத்தையும் பார்க்கலாம் மற்றும் நிர்வகிக்கலாம். இது உங்கள் செலவினங்களைக் கண்காணிப்பதை எளிதாக்குகிறது. மேலும் ஸ்டேட்மென்ட்களையும் சுலபமாக கண்காணித்து, சரியான நேரத்தில் தவணை தொகையைச் செலுத்த முடியும். மேலும், பல வங்கிகளைக் கையாள்வதில் உள்ள சிக்கலும் குறைகிறது.

சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்

வங்கிகள் பெரும்பாலும் தங்கள் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகின்றன. ஒரே வங்கியின் இரண்டு கிரெடிட் கார்டுகளுடன், கேஷ்பேக் டீல்கள், ஷாப்பிங் மீதான தள்ளுபடிகள் மற்றும் பிரத்யேக நிகழ்வு அழைப்பிதழ்கள் உட்பட இந்த விளம்பரச் சலுகைகளின் வரம்பை நீங்கள் பெறலாம்.

கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்

பல கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பது உங்கள் வாங்கும் சக்தியை அதிகரிக்கும். அதே வேளையில், அது கடனைக் குவிக்கும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. கார்டுகளை பொறுப்புடன் பயன்படுத்துவது மற்றும் உங்கள் தேவைக்கு அப்பாற்பட்ட செலவுகளைத் தவிர்ப்பது அவசியம். செலுத்தப்படாத நிலுவைத் தொகையால் அதிக வட்டிக் கட்ட நேரிடும்.

ஆண்டு கட்டணம்

பல கிரெடிட் கார்டுகள் வருடாந்திர கட்டணங்களுடன் வருகின்றன.மேலும் இரண்டு கார்டுகளை வைத்திருப்பதால், இரட்டிப்பு கட்டணத்தை செலுத்த நேரிடும்.=இரண்டாவது அட்டையின் பலன்கள் மற்றும் வெகுமதிகள் கூடுதல் செலவை நியாயப்படுத்துகின்றனவா என்பதை மதிப்பிடுவது மிகவும் முக்கியமானது. சில வங்கிகள் முதல் வருடத்திற்கான வருடாந்திரக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்யலாம் அல்லது ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்குக் கட்டணத்தில் தள்ளுபடியை வழங்கலாம், எனவே இந்த விவரங்களைச் சரிபார்க்க வேண்டியது அவசியம்.

கிரெடிட் ஸ்கோரில் தாக்கம்

குறுகிய காலத்திற்குள் பல கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பது உங்கள் கிரெடிட் ரிப்போர்ட் மீதான கடினமான விசாரணைகள் காரணமாக உங்கள் கிரெடிட் ஸ்கோரை எதிர்மறையாக பாதிக்கலாம். கூடுதலாக, நீங்கள் உங்கள் கார்டுகளை பொறுப்புடன் நிர்வகிக்கத் தவறினால், அதிக நிலுவைகள் மற்றும் கட்டத் தவறிய தவணை ஆகியவை உங்கள் கிரெடிட் ஸ்கோரை மோசமாக பாதிக்கும். எனவே கவனமாக இருப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feature rich kerberos authentication system. The real housewives of beverly hills 14 reunion preview. grand sailor gulet.