நெல்லைக்கு கிடைத்த இன்னொரு பெருமை!

ன்று உலகம் முழுவதும் காற்று மாசு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அந்த வகையில், இந்தியாவின் தலைநகரான டெல்லி உட்பட பல வட மாநிலங்களில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவது மிகவும் கவலைக்குரிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுக்கான சமீபத்திய காற்றுத் தரக் குறியீட்டு தரவை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவிலேயே தரமான காற்று கிடைக்கும் டாப் 10 நகரங்கள் பட்டியலில், தமிழகத்தின் திருநெல்வேலி நகரத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தூய்மையான காற்றை அனுபவிக்கும் நகரங்களில் முதல் இடத்தை திருநெல்வேலி பெற்றுள்ளது. தஞ்சாவூர் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இது தமிழ்நாட்டுக்கு பெருமையாகக் கருதப்படுகிறது.

இரண்டாவது இடத்தில் அருணாச்சலப்பிரதேசத்தின் நாகர் லகுன் என்ற நகரமும், மூன்றாவது இடத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மடிக்கேரி நகரமும், நான்காவது இடத்தில் விஜயபுரா (கர்நாடகா) இடம்பெற்றுள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் கோப்பல் (கர்நாடகா), வாரணாசி (உத்தரபிரதேசம்), ஹூப்ளி (கர்நாடகா), கண்ணூர் (கேரளா),சால் (சத்தீஸ்கர்) ஆகிய நகரங்கள் உள்ளன.

மறுபுறம், காற்றின் தரம் மிக மோசமாக இருக்கும் நகரங்களில், முதல் இடத்தில் தலைநகர் டெல்லி உள்ளது. இரண்டாவது இடத்தை உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் நகரம் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் மேகலாயாவின் பிரிட்ஹேட் நகரம் உள்ளது. சண்டிகர், உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், ஹிமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகியவை காற்றின் தரம் மோசமாக உள்ள மாநிலங்களின் முதல் 10 இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

mark golding political analysis. Declaration of war’ : m23 rebels claim seizing key dr congo city of goma. Upaya kembangkan investasi, bp batam terima kunjungan investor asal belarusia.