ஆக. 14 வரை சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து… பாசஞ்சர் சிறப்பு ரயில் அட்டவணை முழு விவரம்!

தாம்பரம் பணிமனையில் சிக்னல் மேம்பாட்டு பணி உட்பட பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக, ஏற்கெனவே, சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையே, 55 மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 29 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, சில மின்சார ரயில்களின் சேவையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, பாசஞ்சர் சிறப்பு ரயில்களின் நேர அட்டவணையிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

புறநகர் மின்சார ரயில் ரத்து விவரம்

தாம்பரம் – சென்னை கடற்கரைக்கு ஆகஸ்ட் 3 முதல் 14 ஆம் தேதி வரை காலை 7.17, 8.19, 9.00, 9.22, 9.40, 9.50, மாலை 6.26, இரவு 7.15 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. மேலும் இதே தேதிகளில் தாம்பரம் – சென்னை கடற்கரை ரயில் நிலையங்களுக்கு இடையே ஆக.3 முதல் ஆக.14 ஆம் தேதி வரை விரைவு மின்சார ரயில், சாதாரண மின்சார ரயிலாக இயக்கப்படும்.

செங்கல்பட்டு – சென்னை கடற்கரைக்கு காலை 7.45, 8.05, 8.50 ஆகிய நேரங்களில் சாதாரண மின்சார ரயில்கள் இயக்கப்படும். இதுதவிர, அரக்கோணம் – சென்னை கடற்கரைக்கு மாலை 5.15 மணிக்கு மின்சார ரயில் இயக்கப்படும்.

தாம்பரம் – சென்னை கடற்கரைக்கு காலை 8.26, 8.39 ஆகிய நேரங்களில் மகளிர் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும். இந்தத் தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாசஞ்சர் சிறப்பு ரயில்

பாசஞ்சர் சிறப்பு ரயில்களின் திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை – பல்லாவரத்துக்கு ஆக.3-ம் தேதி முதல் ஆக.14 ஆம் தேதி வரை காலை 9.30, 9.45,10.00, 10.15, 10.30, 10.45, 11.00, 11.15, 11.30, நண்பகல் 12.00, 12.15, 12.30,12.45, இரவு 10.40, 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் பாசஞ்சர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

பல்லாவரம் – சென்னை கடற்கரைக்கு அதே நாட்களில் காலை10.17, 10.32, 10.47, முற்பகல் 11.02, 11.17, 11.32, 11.47 நண்பகல் 12.02, 12.17, 12.32, 12.47, மதியம் 1.02, 1.17, 1.42, இரவு 11.30, 11.55 ஆகிய நேரங்களில் பாசஞ்சர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவடி மார்க்கம்

இதனிடையே சென்னை சென்ட்ரலில் (மூா் மாா்க்கெட் வளாகம்) இருந்து இரவு 11.40, 12.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்களும், பட்டாபிராமில் இருந்து ஆவடிக்கு இரவு 11.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும் ஆகஸ்ட் 2 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும். ஆவடியில் இருந்து பட்டாபிராமுக்கு அதிகாலை 3 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், ஆகஸ்ட் 3 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Microsoft announces mandatory multi factor authentication (mfa/2fa) for more secure azure sign ins. Dancing with the stars queen night recap for 11/1/2021. grand sailor gulet.