சென்னையில் அதிகரிக்கும் மெட்ரோ ரயில் பயணிகள்… 9 ஆண்டுகளில் 35 கோடி!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், தற்போது மெட்ரோ ரயில் சேவை சென்னை மக்களின் போக்குவரத்துக்கு மிக அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. மேலும்சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் மூலமாகவும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ள முடியும்.

சென்னைவாசிகளுக்கு மட்டுமல்லாது, தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து சென்னை மாநகருக்கு புதிதாக வருபவர்களுக்கும் மெட்ரோ ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அந்த வகையில், சென்னை மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2024 ஆம் ஆண்டில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 10.52 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்றும், சென்னை மெட்ரோ ரயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3.20 லட்சம் பேர் பயணிக்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டில்1.41 கோடி பேர் அதிகமாக பயணித்துள்ளார்கள்.

9 ஆண்டுகளில் 35 கோடி பேர் பயணம்

2015 முதல் 2018 வரை 2,80,52,357 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம்செய்துள்ளனர். அதேபோல், ​2019 ஆம் ஆண்டில் 3,28,13,628 கோடி பயணிகளும், 2020 ஆம் ஆண்டில் 1,18,56,982 கோடி பயணிகளும், 2021 ஆம் ஆண்டில் 2,53,03,383 கோடி பயணிகளும், 2022-ம் ஆண்டில் 6,09,8,7,765 கோடி பயணிகளும், 2023-ம் ஆண்டில் 9,11,02,957 கோடி பயணிகளும், இந்த நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டில் 10,52,43,721 கோடி பயணிகளும் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளார்கள்.

சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட 2015 ஜூன் 29 முதல் 2024 டிசம்பர் 31 வரை மொத்தம் 35,53,60,793 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Geleceğin dünyasına hazır mıyız ?. Tägliche yacht und boot. En anden hest eller et socialt dyr som en ged kan være med til at give din hest selskab og reducere følelsen af ensomhed.