சென்னை மெட்ரோ ரயில்: இனி சுற்றுலா அட்டை வழங்கப்படாது!

சென்னை மாநகரில் தற்போது இரண்டு நீலம் மற்றும் பச்சை என இரண்டு வழி தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் – விம்கோ நகர், பரங்கிமலை – சென்ட்ரல் என 54 கி. மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது.

மெட்ரோ ரயிலில் பயணிக்க பயணிகள் சுற்றுலா அட்டைகள், டிஜிட்டல் பயணச்சீட்டு, QR குறியீடு பயணச்சீட்டு, ஒற்றை பயண டோக்கன்கள், தேசிய பொது போக்குவரத்து அட்டை உள்ளிட்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி பயணிக்கலாம்.

இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சுற்றுலா அட்டை வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சுற்றுலா அட்டை (1-நாள் சுற்றுலா அட்டை மற்றும் 30-நாள் சுற்றுலா அட்டை) பிப்ரவரி 1, 2025 முதல் நிறுத்தப்படுவதாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துக்கொள்கிறது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அனைத்து பயணிகளுக்கும் தடையற்ற மற்றும் எளிமையான பயணங்களை வழங்கி வருகிறது. சுற்றுலா அட்டைகள் இனி பயன்படுத்த முடியாது என்றாலும், பயணிகள் தங்கள் பயண தேவைகளுக்கு டிஜிட்டல் பயணச்சீட்டு முறைகள், க்யூ ஆர் குறியீடு அடிப்படையில் பயணச்சீட்டுகள், ஒற்றை பயண டோக்கன்கள் மற்றும் தேசிய பொது போக்குவரத்து அட்டை(National Common Mobility Card) உள்ளிட்ட மாற்று பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோவில் தொடர்ந்து பயணிக்கலாம்.

தேசிய பொது போக்குவரத்து அட்டை இப்போது எம்டிசி பேருந்துகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு தடையற்ற பயண அனுபவத்தை வழங்குகிறது. எங்கள் பயணிகளின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் புரிதலுக்கு நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம்.

மெட்ரோ பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் தேவைகளை சிறப்பாகப் பூர்த்தி செய்வதற்கும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முழு முயற்சி எடுத்து வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This contact form is created using. Tägliche yachten und boote. : overvægtige heste kan udvikle fedt omkring manken, hvilket giver en hævet og blød fornemmelse.