சென்னை மெட்ரோ ரயில்களில் அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கை… ஜூலை மாதத்தில் 95 லட்சம் பேர் பயணம்!

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த ஜூலை மாதத்தில் 95.35 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஜூன் மாதத்தை விட ஜூலையில் 11,01,182 லட்சம் பயணிகள் அதிகம் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 84,63,384 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,15,008 பயணிகளும், மார்ச் மாதத்தில் 86,82,457 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகளும், மே மாதத்தில் 84,21,072 பயணிகளும், ஜூன் மாதத்தில் 84,33,837 பயணிகளும் மற்றும் ஜூலை மாதத்தில் 95,35,019 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 12.07.2024 அன்று 3,50,545 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2024, ஜூலை மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 39,72,106 பயணிகள் (Online QR 1,83,797; Static QR 2,77,665; Paper QR 22,09,334; Paytm 4,53,590; Whatsapp – 4,95,030; PhonePe – 3,16,270; ONDC – 36,420), பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 35,31,291 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 30,675 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 4,468 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 19,96,479 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Bareboat sailing yachts. 咖啡健康 孕妇可以喝咖啡吗?(孕妇能喝咖啡吗 ? 看了这个把我吓一跳). 背徳が興奮を倍増させる禁断兄妹中出し近親相姦 パイパン巨乳 夏月 星乃夏月 画像4.