ஏ.ஆர். ரஹ்மானின் uStream ஸ்டுடியோ… இந்திய சினிமாவின் கேம் சேஞ்சர்!

ஸ்கர் விருது வென்ற இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் ARR ஃபிலிம் சிட்டி, சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு தற்போது, ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடம் (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்கப்படுகிறது.

ரஹ்மான் மற்றும் தொழில்துறை முன்னோடியான ஸ்ரீதர் சந்தானம் கூட்டணியில் உருவாகும் இந்த uStream ஸ்டுடியோ, எதிர்கால இந்திய சினிமாவுக்கான புதிய யுகத்தை வரவேற்கும் வகையில், ஒரு ‘கேம் சேஞ்சர்’ ( A Game-Changer ) ஆக அமைக்கப்படுகிறது.

படைப்பாளிகளின் கற்பனையும் நவீன தொழில்நுட்பமும் கைகுலுக்கும் இடமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த uStream ஸ்டூடியோவில், வியப்பூட்டும் LED திரை அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கலைஞர்கள் கணினி காட்சியமைப்புகளுடன் கற்பனை செய்ததை , நேரடியாக அந்தக்கணத்திலேயே கண்முன் காட்சிப்படுத்த முடியும்.

இந்த நவீன டிஜிட்டல் நுட்பத்தைக் கொண்டு உலகப்பதிவுகள், அக்கணத்தின் கற்பனைக் காட்சிப்படுத்துதல், செயல்திறன் பதிவு, பல மெய்நிகர் காட்சிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் simulcam நுட்பம், கேமராவினுள்ளேயே செயல்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் (ICVFX) எனப் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு உலகின் மெய்நிகர் தயாரிப்புத்துறையில் முன்னணியில் இருக்கிறது uStream.

சிறப்பு அம்சங்கள்

1.9 பிக்சல் தடத்திற்கு உட்பட்ட முதன்மையான LED சுவர் 40 அடி நீளமும், 20 அடி உயரமும் கொண்டது. நேரடி 3D சூழல்களுக்காக வடிவமைக்கப்பட்ட அதிவேகத் துல்லியமான ரெண்டர் (Render) கட்டமைப்பு. 7,000 சதுர அடி பரப்பளவுடைய ஸ்டூடியோ.

விரிவான கேமரா டிராக்கிங் அமைப்பு, காட்சிகளுக்கு ஏற்ற ஒளியமைப்பைப் பெறுதல், படக்காட்சிகளின் தரவுகளை உடனுக்குடன் பதிவேற்றுதல், உயர்தரப் படக்காட்சிகள் மற்றும் நிறக்கட்டமைப்புகளை விரைவாக, விருப்பத்திற்கு ஏற்ற முறையில் செயல்படுத்தும் வசதி.

படப்பிடிப்பிலிருந்து, எடிட்டிங் & இறுதிப்பணி வரை சீராகச் செயல்படும் உட்புற (on-site) படப்பிடிப்பிற்குப் பின்பான தயாரிப்பு அறைகள்.

விரிவுபடுத்தக்கூடிய ரெண்டர் (render)கணினிகள், மிகக்கடினமான காட்சியமைப்புகளையும் எளிதாகக் கையாள்கிற வகையில் வடிவமைக்கப்பட்ட கணிப்பொறிகள்.

மொபைல் LED பக்கச்சுவர்கள், நகர்த்தக்கூடிய LED வான்முக விளக்குகள் (Sky light) மற்றும் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட கேமரா-டிராக்கிங் அமைப்புகள். இதனால், படத்தயாரிப்பு இலகுவாகும்.

இயக்குநர்கள், நிர்வாகிகள், விருந்தினர்கள் படப்பிடிப்பின்போதே முன்வரிசையில் அமர்ந்து நேரடியாகக் காட்சிகளை காணும் சாத்தியம்.

மினியேச்சர் ஸ்கேனிங், மினியேச்சர் 3D பிரிண்டிங், காஸியன் ஸ்பிளாட்டிங் தொழில்நுட்பங்களை யும் (Gaussian splatting)விரைவில் வழங்குதல்.

குறைந்த படங்கள் அல்லது கையிருப்பு வீடியோக்களில் இருந்து அசாதாரணமான உண்மை சார்ந்த 3D காட்சிகளை உருவாக்குதல்.

பயிற்சி வகுப்பில் சேர வாய்ப்பு

uStream Labs மூலமாக, புதிய தலைமுறை மெய்நிகர் தயாரிப்புத் திறமைகளை (Virtual Production Talent) வளர்ப்பதற்கான பயிற்சித் திட்டங்களையும் வழங்குகிறது uStream ஸ்டுடியோ. இதற்கான பயிற்சி வகுப்பு இம்மாதம் 24 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.

எனவே இதில் பயிற்சி பெற ஆர்வமுள்ளவர்கள், இந்த தொழிலில் ஏற்கெனவே பணிபுரிந்தாலும் மேலும் கற்றுக்கொள்ள விரும்புவர்கள் மற்றும் மாணவர்கள் கீழ்க்காணும் இணைய படிவம் மூலம் தங்களைப் பற்றிய விவரங்களைப் பூர்த்தி செய்து, பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.


https://forms.office.com/Pages/ResponsePage.aspx?id=9EHIGPpunkKssN0f5SsveOZb7NbaeEtIu6cJrREM3-pURjQwRDVFVEZTUDAwN1JER1g2T084WEJaOS4u&origin=QRCode

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Anonymous case studies :. 陳元溢師傅多年來以卓越的服務能力和廣泛的專業知識為不同人士提供服務,並贏得了廣泛的 客戶讚許 和認可。. Rent a car/bike/boat roam partner.