ஏர் இந்தியா விமானத்தில் இனி வைஃபை வசதி… ‘இலவசம்’ கட்டணமாக மாறுமா?

டந்த 2022 ஆம் ஆண்டு, அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியது. இதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளும், பயணிகளுக்கான சேவைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டன.

அந்த வகையில், கடந்த நவம்பர் மாதம் ஏர் இந்தியா விமான நிறுவனத்துடன் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் இணைந்தது. இந்த நிலையில், பயணிகளுக்கான சேவைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக, தனது உள்நாட்டு வழித்தடங்களில் விமானத்தில் வைஃபை இணைப்பை வழங்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. முன்னதாக நியூயார்க், லண்டன், பாரிஸ் மற்றும் சிங்கப்பூர் போன்ற சர்வதேச தடங்களில் பயணிகளுக்கு ஏர் இந்தியா இந்த புதிய வைஃபை வசதி சோதனையை நடத்தியதைத் தொடர்ந்து, தற்போது இந்த சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, உள்நாட்டு விமானத்தில் ‘இன்பிளைட் இன்டர்நெட்’ ( விமானத்துக்குள் இணைய சேவை) வழங்கும் இந்தியாவின் முதல் விமான நிறுவனமாக ஏர் இந்தியா மாறியுள்ளது.

இந்த சேவையின் மூலம், 10,000 அடி உயரத்திற்கு மேல் விமானத்தில் பறக்கும்போதே அதிவேக இணைய சேவையை பயன்படுத்த முடியும். ஏர்பஸ் ஏ350, போயிங் 787-9 மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏர்பஸ் ஏ321 நியோ விமானங்களில் பயணம் செய்யும்போது, உள்நாட்டு வழித்தடங்களில் இந்த இலவச வைஃபை இணைய சேவையைப் பெறலாம் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

பயணிகள் தங்கள் லேப்டாப், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட வை-ஃபை இயங்கும் அனைத்து கருவிகளிலும் இந்த இலவச இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும். இந்த சாதனங்களை ‘ஏர் இந்தியா வைஃபை’ நெட்வொர்க்குடன் இணைத்து தங்கள் PNR மற்றும் கடைசி பெயரை உள்ளிட்டு பயணிகள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இலவச வைஃபை எத்தனை நாட்களுக்கு?

தற்போதைக்கு, பயணிகளுக்கான வைஃபை வசதியை ஏர் இந்தியா இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ள போதிலும், நீண்ட நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படாது என்றும், குறிப்பிட்ட சில மாதங்களுக்குப் பின்னர் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஏனெனில், விமானத்தில் இன்டர்நெட்டின் தேவை பயணிகளிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, இதை ஒரு துணை வருவாயாக விமான நிறுவனங்கள் கருதுகின்றன. அத்துடன், இணைய இணைப்பை வழங்குவதற்கு விமானத்துக்குள் வைஃபை ஆன்டனாக்கள் அமைக்கப்படுவதால், அதற்கு செலவு ஆகும். எனவே நீண்ட நாட்களுக்கு இந்த இலவச வசதி இருக்காது என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hmpv virus symptoms : what you need to know trending news fox. Virginia home explosion kills one firefighter, injures 11 others facefam. 최신 온라인 슬롯.