11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் : 91.17% மாணவர்கள் தேர்ச்சி!

மிழ்நாட்டில், கடந்த மார்ச் 4 முதல் 25 ஆம் தேதி வரை 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை 8 லட்சத்து 11,172 மாணவர்கள் எழுதினர். இதில் மாணவிகள் 4 லட்சத்து 26,821 பேர். அதேபோன்று மாணவர்கள் 3 லட்சத்து 84 ,351 பேர்.

தேர்வு முடிவடைந்ததை தொடர்ந்து, விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில், 7 லட்சத்து 39, 539 மாணவர்கள் (91.17%) தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவிகள் அசத்தல்

அதேபோல் மாணவர்களை விட 7.43% அதிகம் தேர்ச்சி பெற்று மாணவிகள் அசத்தியுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 3 லட்சத்து 35,396 பேர். தேர்ச்சி பெற்ற மாணவிகள் 4 லட்சத்து 4,143 பேர்.

பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம்

அரசுப் பள்ளிகள் 85.75%

அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.36%

தனியார் சுயநிதி பள்ளிகள் 98.09%

இருபாலர்பள்ளிகள் 91.61%

பெண்கள் பள்ளிகள் 94.46 %

பாடப்பிரிவு வாரியாக தேர்ச்சி விகிதம்

அறிவியல் 94.31%

வணிகவியல் 86.93%

கலைப்பிரிவு 72.89 %

தொழிற் பாடம் 78.72%

கோவை மாவட்டம் முதலிடம்

96.02 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை 92.86 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.

241 அரசுப் பள்ளிகள் 100/100 சதவீதம் தேர்ச்சி

மேலும் 1964 மேல்நிலைப்பள்ளிகள் 100/100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 241 அரசுப் பள்ளிகள் 100/100 தேர்ச்சி பெற்றுள்ளன.

100/100 மதிப்பெண் பெற்றவர்கள்

அதேபோல் தமிழ் பாடத்தில் 8 மாணவர்களும், ஆங்கிலம் 13, இயற்பியல் 696, வேதியியல் 493, உயிரியல் 171, கணிதம் 779, தாவரவியல் 2, விலங்கியல் 29, கணினி அறிவியல் 3432, வணிகவியல் 620, கணக்குப் பதிவியல் 415, பொருளியல் 741, கணினிப் பயன்பாடுகள் 288, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியலில் 293 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களில் 7504 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய சிறைவாசிகளில் 170 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bilim tarihimiz İnsan ve kainat. Özel yat kiralama. Er min hest overvægtig ? tegn og tips til at vurdere din hests vægt hesteinternatet.