இன்றைய தேதிக்கு மொபைல் போன் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் காலையில் கண் விழிப்பதே வாட்ஸ் அப்பில்தான். காலையில் தொடங்கி இரவு தூங்கச் செல்லும் வரை வாட்ஸ் அப் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது.
வீட்டிலுள்ளவர்கள், நண்பர்கள் எனத் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்லாது அலுவலக வேலையிலும் வாட்ஸ் அப் மூலமாக வேலை குறித்த தகவல்கள், வீடியோக்கள், படங்கள், ஆவணங்கள் உள்ளிட்ட பலவற்றையும் பகிரும் நிலையில், சில சமயங்களில் ஒருவருக்கு அனுப்ப வேண்டிய தகவலை வேறு யாருக்கோ அல்லது குரூப்புக்கோ அனுப்பிவிடும் நிகழ்வுகள் நடப்பது உண்டு.
வாட்ஸ் அப் சாட்டில் குளறுபடி
அப்படியான சமயங்களில் அவசரமாக வாட்ஸ் அப் சாட்டில் நாம் அனுப்பிய மெசேஜை மொத்தமாக அழிக்க நினைத்து, Delete for Everyone என கொடுப்பதற்குப் பதிலாக Delete for me கொடுத்துவிட்டால், அந்த மெசேஜ் நமக்கு மட்டும் அழிந்துவிடும். ஆனால், மறு முனையில் உங்கள் மெசேஜை பெற்றவர் அதனை பார்க்க முடியும். நமது மெசேஜை நமது சாட்டில் மட்டும் நீக்கிவிட்டு என்ன செய்வது என கையை பிசைந்து கொண்டிருப்போம்.
இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது அதன் பயனாளர்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, Delete for Everyone என்பதற்கு பதிலாக Delete for me கொடுத்துவிட்டால் அதை உடனே Undo செய்து கொள்ளலாம்.
எனவே, இனி அவசரத்தில் Delete for me ஆப்சனைத் தவறுதலாக க்ளிக் செய்தாலும் இனி கவலைகொள்ளத் தேவையில்லை. அதை Undo செய்துகொள்ளலாம்.
Undo செய்வது எப்படி?
Delete for me -ஐ க்ளிக் செய்யும் போது திரையில் பாப் அப் வடிவில் Undo ஆப்சன் தோன்றும். Delete For me கொடுத்த பிறகு 5 விநாடிகளுக்கு மட்டும் இந்த Pop-up திரையில் தெரியும். இதன்மூலம் Undo க்ளிக் செய்தால், வாட்ஸ் ஆப் சாட்டில் டெலிட் ஃபார் மீ ஆப்சனை தவறுதலாக க்ளிக் செய்தாலும் அதை மீண்டும் மாற்றிக்கொள்ள முடியும்.
அதே சமயம், Delete for Everyone என கொடுக்கப்பட்டு அழிக்கப்பட்ட மெசேஜை மீண்டும் பெற விரும்பினால் Undo செய்து அதனை பெற முடியாது.