மூன்றாண்டு கால திமுக ஆட்சியும் கவனம் ஈர்த்த முக்கிய திட்டங்களும்!

தமிழ்நாட்டில் தனது மூன்றாண்டு கால ஆட்சியை நிறைவு செய்து, நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி.

ஆட்சி பொறுப்பேற்ற அன்றே கோட்டைக்குச் சென்று முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவுடன், மகளிருக்கான “விடியல் பயணத் திட்டம்” கொரோனா நிவாரண உதவித் தொகை ரூ.4,000/- வழங்கும் திட்டம், முதல்வரின் முகவரித்துறை உருவாக்கும் திட்டம், பால்விலை லிட்டருக்கு 3 குறைப்புத் திட்டம், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 குறைப்புத் திட்டம் ஆகிய 5 கோப்புகளில் முதன் முதல் ஆணைகள் பிறப்பித்து, தொடர்ந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த தொடங்கினார்.

3 ஆண்டு கால ஆட்சியின் முக்கிய திட்டங்கள்

அப்படி செயல்படுத்தப்பட்ட ஏராளமான திட்டங்களில், மக்களின் கவனம் ஈர்த்த மற்றும் பாராட்டுதல்களைப் பெற்ற முக்கியமான திட்டங்களின் பட்டியல் இங்கே…

 கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1 கோடியே 15 இலட்சம் மகளிர் மாதந்தோறும் ரூ.1,000/- பெறுகின்றனர்.

 முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். 31,000 அரசுப் பள்ளிகளில் 17 இலட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.

 புதுமைப் பெண் திட்டத்தில் 2,72,216 கல்லூரி மாணவிகள் மாதந்தோறும் 1000 ரூபாய் பெற்று வருகின்றனர்.

 விடியல் பயணம் திட்டத்தில் மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் 445 கோடி முறை பயணம் செய்து மாதந்தோறும் ரூ.888 சேமிக்கின்றனர்.

 மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடியே 70 இலட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

 ‘இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் 2 இலட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

நான் முதல்வன் திட்டம்

 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 70 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டு 12 இலட்சம் குழுக்கள் பயன் !
 விவசாயிகளுக்கு 2 இலட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டு கூடுதலாக 2,99,384 ஏக்கரில் பயிர் சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ்
ரூ.1,501 கோடி மதிப்பீட்டில் 4,812 கி.மீ. சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
 “நான் முதல்வன் திட்டத்தில் பொறியியல், கலை (ம) அறிவியல் கல்லூரி, பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்ற 28 இலட்சம் மாணவர்களுக்குத் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.


 கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் 26 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்பட்டு 28 இலட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

1,477 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு


 ரூ.4,818 கோடி கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு 13 இலட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
 மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.1,500-லிருந்து ரூ.2,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது
 இரண்டே ஆண்டுகளில் 1,477 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 ரூ.5,996.53 கோடி மதிப்பிலான6,800.68 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

 குறைவான நேரத்தில் நிறைவான சேவைகளுக்காக 3 ஆண்டுகளில் 30,000 இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டு பொதுமக்களுக்குப் பயனளிக்கின்றன.
 2600 ஆண்டு தமிழர் வரலாற்றை உயர்த்திப் பிடிக்கும் கீழடி அகழாய்வுப் பணியில் கிடைத்துள்ள பொருள்களைப் பாதுகாக்கும் அருங்காட்சியகம் நிறுவப்பட்டுள்ளது.
 அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் – ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் மேம்படுத்தவும் ரூ.200 கோடியில் 1,769 பணிகளை நிறைவேற்றியுள்ளது.
 ரூ.2,358.53 கோடி மதிப்பீட்டில் 44 அரசு பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளும் (Polytechnic); ரூ.2,877 கோடி மதிப்பீட்டில் 71 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களும் (ITI) தொழில் 4.0 அளவிற்குத் தரம் உயர்த்தப்படுகின்றன.

கவனம் ஈர்த்த காலை உணவு திட்டம்

முதலைமைச்சர் மு.கஸ்டாலின் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தியுள்ள காலை உணவுத் திட்டத்தின் சிறப்புகளை, தெலுங்கானா மாநில அரசு அறிந்து அதன் அலுவலர்கள் தமிழ்நாட்டிற்கு வருகைபுரிந்து காலை உணவு தயாரிக்கப்படும் இடம், பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பப்படுதல், பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடுதல் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு தமிழ்நாடு இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துகிறது. தெலுங்கானா மாநிலத்திலும் இந்தக் காலை உணவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறிச் சென்றனர். அவ்வாறே, தெலுங்கானா மாநிலத்தில் தற்போது காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தக் காலை உணவுத் திட்டம் இந்தியாவைக் கடந்து வெளிநாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக கனடா நாட்டில் அதன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது x வலைதளப்பக்கத்தில் 2.4.2024 அன்று “கனடா நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்குத் தேசிய உணவுத் திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கப்போகிறோம்” எனப் பதிவிட்டிருந்தார்.

இதே போல இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மற்ற மாநில அரசுகளையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் தமிழ்நாட்டை பின்பற்றி இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வேறு பல மாநிலங்களில் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்திட பரிசீலித்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advantages of local domestic helper. A agência nacional de Águas e saneamento básico (ana) : um guia completo. Ross & kühne gmbh.