Amazing Tamilnadu – Tamil News Updates

புயல் பாதிப்பும் உதயநிதியின் புயல் வேக நிவாரண நடவடிக்கைகளும்!

நெருக்கடியான நேரத்தில் தான் ஒரு தலைவனின் தலைமைத்துவ பண்பும் மக்களின்பால் கொண்டுள்ள பற்றும் வெளிப்படும் என்பார்கள். அது உண்மைதான் என்பது சென்னை மழை வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட்டிய உதவிக்கரமும், களத்தில் நின்று மேற்கொண்ட மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளும் உணர்த்தியது.

மிக்ஜாம் புயலால் டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையும், அதனைத் தொடர்ந்து பெருக்கெடுத்த வெள்ளமும் சென்னையைப் புரட்டிப்போட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அரசு இயந்திரம் முழு வீச்சில் களம் இறங்கியது. மழை வெள்ளத்தைத் தொடர்ந்து, அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள்,எம்.பி-க்கள் மற்றும் திமுக-வினரும் களம் இறங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுப்பதற்கு முன்னதாகவே களம் இறங்கினார் அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புயல்வேகத்தில் பணியாற்ற வேண்டும் என டிசம்பர் 3 ஆம் தேதியன்றே திமுக இளைஞரணியினருக்கு அறிக்கை விடுத்து அறிவுறுத்தியதோடு, தானும் களத்தில் இறங்கினார். தனது சேப்பாக்கம் தொகுதியில் மட்டுமல்லாது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையின் அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டார். உரியவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கினார். அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கினார். உடனடியாகச் செய்ய வேண்டிய பணிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

புயல் வெள்ளத்தின்போது உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட புயல் வேக நிவாரண நடவடிக்கைகளுக்கான டைம் லைன் இங்கே…

டிச. 3

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி – ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை, ஜானி ஜான்கான் சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்தே வந்து, மழை நீர் வெளியேற்றும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

டிச. 4

அதிகாலை

திருவல்லிக்கேணி பெரிய பள்ளி வாசல் – ஐஸ் ஹவுஸ் – அவ்வை சண்முகம் சாலை/பி.வி.இராமன் சாலை ஆகிய பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டார். சென்னை முழுவதும் உள்ள பாதிப்புகள் குறித்து அறிய, சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்று அவசர உதவி கட்டுப்பாட்டு மையத்திலும் கண்காணிப்பு நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டார். அதைப் போலவே சேப்பாக்கத்திலுள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.

மாலை 4 மணி

ராயப்பேட்டை ஜி.பி.சாலைக்குச் சென்றார். அங்கு மழை நீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி பணியாளர்களிடம் விபரங்களைக் கேட்டறிந்தார். பணிகளை விரைவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

இரவு 7 மணி

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி பகுதிகளில் வீடுகளில் தேங்கியிருந்த தண்ணீரை விரைந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பித்தார்.

இரவு 8.30 மணி

திருவல்லிக்கேணி பகுதி, மாட்டாங்குப்பம், மற்றும் வி.ஆர். தெரு பகுதி பொதுமக்களைச் சந்தித்து அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைக் கேட்டறிந்தார். உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இரவு 9.30 மணி

கோட்டூர்புரம் சித்ராநகரில் தாழ்வான பகுதிகளில் வசித்த பொதுமக்கள் அழைத்து வரப்பட்டு, நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை இரவு 9.30 மணியளவில் சந்தித்துப் பேசினார். அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்யப்பட்டிருந்ததா என ஆய்வு செய்தார்.

இரவு 11 மணி

அங்கிருந்து கிளம்பி வேளச்சேரி சேவா நகர் முகாமுக்குச் சென்றார். அங்கு தங்கி இருந்த பொதுமக்களைச் சந்தித்த அவர், அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்தார். தரமான உணவு உள்ளிட்ட அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

டிச. 5

மாலை 3 மணி

வேளச்சேரி சாலை – ஐந்து பர்லாங் சாலையில் 80 அடி பள்ளத்தில் சிக்கிய இருவரை மீட்க துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மாலை 4 மணி

வேளச்சேரி பகுதிக்குச் சென்ற அவர், அங்கு பாதிப்புக்குள்ளான பொதுமக்களைச் சந்தித்து அவர்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். அங்கிருந்து கிளம்பி பெருங்குடி கல்லுக்குட்டை பகுதிக்குச் சென்ற அவர், மழை நீரால் பாதிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

மாலை 6 மணி

சிந்தாதிரிப்பேட்டை சென்றார் உதயநிதி ஸ்டாலின். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியவாசிய பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை வழங்கினார்.

இரவு 7 மணி

சேப்பாக்கம் பகுதியில் லாக் நகர் கிளிமரம் பகுதி பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த மழைநீரை அகற்றும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் விக்டோரியா விடுதி சாலையில், குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு உணவுப்பொருட்களையும் நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.

இரவு 8 மணி

திருவல்லிக்கேணி – அனுமந்தபுரம் பகுதி, கஜபதி தெரு – இராஜாஜி நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு அரிசி – பிரட் – பால் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இரவு 9 மணி

சாந்தோமில் உள்ள மின்வாரிய உதவிப் பொறியாளர் அலுவலகம் சென்றார் உதயநிதி ஸ்டாலின். அங்கு மின்சாரத்துறை உயர் அதிகாரிகளிடம் மின்தடைக்கான காரணத்தைக் கேட்டறிந்தார். விரைந்து மின் விநியோகம் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

டிச. 6

அதிகாலை 5 மணி

வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலைக்குச் சென்ற உதயநிதி ஸ்டாலின், அங்கு மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணி குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மாலை 3 மணி

தலைமைச் செயலகத்திற்குச் சென்றார். அங்கு நடைபெற்ற உயர் நிலை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வரும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம், அப்போதைய நிலவரம் குறித்து காணொளி வாயிலாகக் கேட்டறிந்தார்.

மாலை 5 மணி

சேப்பாக்கம் பகுதி, 63 ஆவது வட்டம், புதுப்பேட்டை நாராயண தெருவுக்குச் சென்ற அவர், அங்கு பொதுமக்களுக்கு அரிசி – பால் போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். பொதுமக்களிடம் அவர்களுக்குத் தேவையான வசதிகள் குறித்துக் கேட்டறிந்த அவர், அவற்றை நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். பின்னர் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி – ஜானிஜான்கான் சாலை அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளைப் பார்வையிட்டார்.

டிச. 7

காலை 11 மணி

அண்ணா நகர் டி.பி.சத்திரம் பகுதிக்குச் சென்றார் உதயநிதி ஸ்டாலின். அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 பேருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.பின்னர் பாரதிபுரம், வத்தலகுண்டு தெரு ஆகிய பகுதிகளைப் பார்வையிட்டார்.

மாலை 6 மணி

சேப்பாக்கத்தில் நீலம் பாஷா தர்கா தெருவுக்குச் சென்ற உதயநிதி ஸ்டாலின் 1000 பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள், பால், போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். ஜாம்பஜார் மார்க்கெட்பகுதியில் தேங்கி இருந்த தண்ணீரை வெளியேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

டிச. 8

பகல் 12 மணி

ஆயிரம் விளக்கு பாரதீஸ்வரர் காலனியில் 1000 பேருக்கு அரிசி, பால் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

மதியம் 1 மணி

நரசிம்மன் தெரு பகுதியில் மாவட்டக் கழகம் சார்பில் 1000 பேருக்கு அரிசி, பால் ஆகிய பொருட்களை வழங்கினார். அடுத்து நக்கீரன் தெருவில் வசிக்கும் 750 குடும்பத்தினருக்கு அரிசி, பால், போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். அதன்பிறகு ஆயிரம் விளக்கு மருத்துவ முகாமை நேரில் ஆய்வு செய்தார் உதயநிதி ஸ்டாலின்.

மாலை 6 மணி

சேப்பாக்கம் நைனியப்பன் தெருவில் வசிக்கும் ஆயிரம் பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள், பால் மற்றும் போர்வை வழங்கினார். பின்னர் உசேன் முல்க் தெருவில் வசிக்கும் 1000 பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள், பால், போர்வை வழங்கினார்.

டிச. 9

மாலை 5.30 மணி

ஆயிரம் விளக்கு காமராஜபுரம் பகுதி பொதுமக்களுக்கு அரிசி, பால், போர்வை வழங்கினார். பின்னர் புஷ்பா நகர் பகுதியைச் சேர்ந்த 1200 குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இரவு 7 மணி

ஆயிரம் விளக்கு ஜெயலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த 1200 பேருக்கு அரிசி, பிரெட், பால் மற்றும் போர்வைகளை வழங்கினார். பின்னர் எழும்பூர் புதுப்பேட்டை பகுதி பொதுமக்களுக்கு அரிசி, புடவை, போர்வை, கைலி, பிரெட் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

இரவு 7.30 மணி

சேப்பாக்கம் பகுதி மக்களுக்கு அரிசி, பால், மளிகை பொருட்கள், போர்வைகள் உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பை வழங்கினார்.

இரவு 8 மணி

நடுக்குப்பத்தைச் சேர்ந்த 1200 பொதுமக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், பால், போர்வை போன்ற நிவாரணப் பொருட்களை வழங்கினார்

அதேபோல பூரம்பிரகாசம் தெரு பொதுமக்களுக்கு அரிசி, பால் , போர்வை போன்ற பொருட்களை வழங்கினார். பின்னர் 8.30 மணியளவில் சேப்பாக்கம் வைக்கோல் தொட்டி தெருவைச் சேர்ந்த 500 பொதுமக்களுக்கு மழைக்கால நிவாரண பொருட்களை வழங்கினார்.

டிச. 10

11:30 மணி

ஆலந்தூர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்களை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின். பின்னர் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த பொதுமக்களுக்கு உணவு மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.

பகல் 1 மணி

ஆலந்தூர் பொன்னியம்மன் கோவில் பகுதி மக்களுக்கு மழைக்கால நிவாரணப் பொருட்களை வழங்கினார். மாலை 6.30 மணியளவில் சேப்பாக்கம் சென்ற உதயநிதி ஸ்டாலின், அங்கு சிங்கனசெட்டித் தெருவைச் சேர்ந்த 1000 பொதுமக்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் போர்வைகளை வழங்கினார். மாலை 7 மணியளவில் குப்புமுத்து தெருவில் உள்ள பொதுமக்கள் 1000 பேருக்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களையும் போர்வைகளையும் வழங்கினார்.

இவ்வாறு இரவு பகல் பாராமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதிலும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றிச் சுழன்று, அரசின் துரித நடவடிக்கைகளு க்கு துணை நின்றது மழை வெள்ள பாதிப்பிலிருந்து சென்னை மக்களை மீட்டெடுப்பதில் பெரும் பங்களிப்பாக அமைந்தது எனலாம்!

Exit mobile version