நெல்லை, திருச்செந்தூர், தூத்துக்குடி … 25 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து… முழு விவரம்!

நெல்லை, திருச்செந்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு இருமார்க்கமாக பயணிக்கும் பயணிகளும், நாகர்கோவில் மற்றும் செங்கோட்டையிலிருந்து நெல்லைக்கு வரும் பயணிகளும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 21 ஆம் தேதி வரையில் தங்களது பயணத் திட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளும் வகையில், 25 எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

மதுரை ரயில்வே கோட்டத்தின் கீழ் வரும் நெல்லை-மேலப்பாளையம் இடையே இருவழிப்பாதை பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள் குறித்த முழு விவரம் வருமாறு…

தூத்துக்குடியிலிருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு வாஞ்சி மணியாச்சி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.06847) வரும் 11 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலும், வாஞ்சி மணியாச்சியிலிருந்து காலை 3.10 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06848) வரும் 12 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

நெல்லையிலிருந்து காலை 7.25 மணிக்கு திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06673) 12 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலும், திருச்செந்தூரிலிருந்து காலை 8.15 மணிக்கு நெல்லை செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (06674) 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

நெல்லையிலிருந்து காலை 10.10 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06675) பிப்ரவரி 11, 15 மற்றும் 17 முதல் 21 ஆம் தேதி வரையிலும், திருச்செந்தூரிலிருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06676) 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, நெல்லையிலிருந்து மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06677) 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலும், திருச்செந்தூரிலிருந்து மாலை 6.15 மணிக்கு நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06678) வரும் 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி மற்றும் 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

நெல்லையிலிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06409) 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலும், திருச்செந்தூரிலிருந்து காலை 7.20 மணிக்கு நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06405) 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மேலும், வாஞ்சி மணியாச்சியிலிருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06679) வரும் 11 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலும், திருச்செந்தூரிலிருந்து மதியம் 2.10 மணிக்கு வாஞ்சி மணியாச்சி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06680) 12 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது.

நெல்லையிலிருந்து காலை 7.35 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06668) 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலும், தூத்துக்குடியிலிருந்து மாலை 6.25 மணிக்கு நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06667) 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

செங்கோட்டையிலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06684) 15 ஆம் தேதி மற்றும் 17 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலும், நெல்லையிலிருந்து காலை 7 மணிக்கு செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06684) 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

செங்கோட்டையிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06686) 15 மற்றும் 17 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலும், நெல்லையிலிருந்து மதியம் 1.50 மணிக்கு செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06687) 15 ஆம் தேதி மற்றும் 17 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து மாலை 7.50 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06641) 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலும், நெல்லையிலிருந்து காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06642) 16 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (06012) வரும் 17, 18 ஆகிய தேதிகளிலும், தாம்பரத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (06011) 16, 18 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

நெல்லையிலிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06030) 18 ஆம் தேதியும், மேட்டுப்பாளையத்திலிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06029) 19 ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

புனலூரிலிருந்து காலை 6.35 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06639) 15 ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

As early as 1991, kl home care's parent company hl&c employment agency ltd. A aneel é a agência nacional de energia elétrica, responsável por regular e fiscalizar o setor elétrico brasileiro. Ross & kühne gmbh.