Amazing Tamilnadu – Tamil News Updates

‘நீட்’ சர்ச்சை : தேசிய தேர்வு முகமையின் நிலைப்பாடும் முன்வைக்கப்படும் கேள்விகளும்!

ளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நழைவுத் தேர்வு, கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நடந்தது. என்.டி.ஏ எனப்படும் தேசிய தேர்வு முகமையால் ( National Testing Agency) நடத்தப்படும் இந்த தேர்வுக்கான முடிவுகள், கடந்த 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், நாடு முழுவதும் 67 போ் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனா். இந்த நிலையில், இந்த தேர்வு முடிவுகள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் இருந்து மட்டும் ஏழு பேர் 720 என்ற முழு மதிப்பெண் பெற்றனர். மேலும் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த ராஜஸ்தானில் இருந்து மட்டும் 11 பேர் முதலிடம் பெற்றிருப்பதும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் இரண்டாமிடம், மூன்றாமிடங்களை பிடித்த மாணவர்களுக்கு 718, 719 மதிப்பெண்கள் எடுத்துள்ளதாலும் குழப்பம் நிலவியது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இந்த நிலையில், நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற விடுமுறை கால இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அஹ்ஸானுதீன் அமானுல்லா இணைந்து விசாரித்தனர். தேர்வை ரத்து செய்வது, மறுதேர்வு மற்றும் கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண்களை ரத்து செய்வது குறித்த மூன்று மனுக்கள் விசாரிக்கப்பட்டன.

கருணை மதிப்பெண் ரத்து / மறு தேர்வு

அப்போது தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நரேஷ் கவுசிக், “1,563 பேருக்கு மறுதேர்வு நடத்தப்படும். இதற்கு அறிவிப்பு இன்று (வியாழக்கிழமை) வெளியாகும். மறுதேர்வு ஜூன் 23 ஆம் தேதியும், அதன் முடிவுகள் 30 ஆம் தேதியும் வெளியாகும்” எனத் தெரிவித்தார். அப்போது, கலந்தாய்வு பணிகள் பாதிக்கப்படாத வகையில் மறுதேர்வை விரைந்து நடத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், 1,563 பேருக்கு கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு, அவர்களது அசல் மதிப்பெண் விவரம் வெளியிடப்படும். அந்த முடிவுடன் கலந்தாய்வில் பழைய தேர்வில் பெற்ற மதிப்பெண்களுடன் பங்கேற்பது அல்லது மறுதேர்வை எதிர்கொள்வது குறித்த முடிவை தேர்வர்கள் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரின் அடுக்கடுக்கான கேள்விகள்

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமைக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நடந்த நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. நீட் தே ர்தர் வில் 718, 719 மதிப்பெண்கள் என்பது சாத்தியமில்லை .கருணை மதிப்பெண்கள் என்ற பெயரில் 1500- க்கும் மேற்பட்டோட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கி குளறுபடி நடைபெற்றுள்ளது. கடும் எதிர்ப்பை அடுத்து 1563 பேருக்கு கருணை மதிப்பெண்ணை தேசிய தேர்வு முகமை ரத்து செய்துள்ளது.

ஒரு கேள்வியை விட்டிருந்தால் 716 மதிப்பெண் கிடைத்திருக்கும், ஒரு கேள்வியை தவறாக எழுதியிருந்தால் 715 மதிப்பெண் கிடைக்கும். உச்ச நீதிமன்றம் எந்த இடத்திலும் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கவில்லை.

‘நேர பற்றாக்குறை நீட் தேர்வுக்கு எப்படி பொருந்தும்?’

சட்டப்படிப்புக்கான ஆன்லைன் தேர்வையும், மாணவர்கள் நேரடியாக தேர்வு எழுதுவதையும் எப்படி ஒப்பிட முடியும்? சட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு
தொடர்பாபான தீர்ப்பை நீட் தேர்வுக்கு பொருத்திப் பார்ப்பது சரியல்ல. நேர பற்றாக்குறைக்கு கருணை மதிப்பெண் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. நேர பற்றாக்குறை என்பது நீட் தேர்வுக்கு எப்படி பொருந்தும்?

ஏழை மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாக மாறிக்கொண்டிருக்கிறது. அரியானாவில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் இருந்து 6 பேர் 720 மதிப்பெண் எடுத்துள்ளனர்.

2024-ல் மட்டும் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கருணை மதிப்பெண் என முடிவெடுத்தபோது தேசிய தேர்வு முகமை யாரிடம் அதனை
தெரிவித்தது? நீட் குளறுபடிகளா ல் மாணவர்களிடையே அச்சம் எற்பட்டுள்ளது. நீட் விலக்கு மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என திமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது” என்றார்.

Exit mobile version