நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை: தயாராகும் தமிழக மையங்கள்!

நாடாளுமன்ற முதல்கட்ட தேர்தலிலேயே தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியன்று நடைபெற்றது. இதில், 72.09 சதவிகித வாக்கு பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் இதுவரை ஆறு கட்டத்தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்டத் தேர்தல் வருகிற ஜூன் 1 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.

இந்த நிலையில், தேர்தல் நடைபெற்ற அனைத்து தொகுதிகளுக்கான வாக்கு இயந்திரங்கள் மூடி சீல் வைக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் எனப்படும் வலுவான அறைகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

வாக்கு எண்ணிக்கை, வருகிற ஜூன் 4 அன்று தொடங்க உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், திங்களன்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்ற நிலையில், இக்கூட்டத்தில், வாக்குப்பதிவு ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆலோசனைக் கூட்டம்

வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர்

அந்த வகையில் தமிழ்நாட்டில் 39 தொகுதி களுக்கான வாக்கு எண்ணிக்கை, 39 மையங்களில், 43 கட்டடங்களில் உள்ள 234 அறைகளில் நடைபெறுகிறது. பொதுவாக ஒரு வாக்கு எண்ணிக்கை அறையில் 14 மேஜைகள் போடப்பட்டிருக்கும். வாக்காளர்கள் எண்ணிக்கை, பதிவான வாக்குகள் எண்ணிக்கை அடிப்படையில் தேவைப்படும் இடங்களில் கூடுதல் மேஜைகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று அமைக்கப்படும். குறிப்பாக, அனைத்து மையங்களிலும் சேர்த்து வாக்கு எண்ணிக்கைக்கு 3,300 மேஜைகள் அமைக்கப்பட உள்ளன.

வாக்கு எண்ணிக்கைப் பணியில் 10,000 பணியாளர்கள், அவர்களுக்கு உதவியாக மின்னணு இயந்திரங்கள் எடுத்து வருதல் உள்ளிட்டவற்றுக்காக 24,000 பேர், நுண் பார்வையாளர்களாக 4,500 பேர் என மொத்தம் 38,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு முதற்கட்டப் பயிற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அடுத்தகட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டு, ஜூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

வீடியோ பதிவு

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4 அன்று, காலை 8 மணிக்கு முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்படும். இதன் தொடர்ச்சியாக 8.30 மணிக்கு மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்கும். மின்னணு வாக்குகள் எண்ணப்படும்போதே, அஞ்சல் வாக்குகள் எண்ணிக்கையும் தொடர்ந்து நடைபெறும்.

அதேநேரம், அஞ்சல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர், இறுதிச் சுற்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திர வாக்குகள் எண்ணி இறுதி முடிவு அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கைக்கான ஒவ்வொரு மேஜையிலும் எண்ணும் பணி கேமராவில் பதிவு செய்யப்படும்.

இதுதவிர, சுற்றியுள்ள நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்படும் எனத்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

As early as 1991, kl home care's parent company hl&c employment agency ltd. A agência nacional de vigilância sanitária (anvisa). Ross & kühne gmbh.