தொடரும் முதலீடுகள்: முதலமைச்சர் பெருமிதம்!

லக முதலீட்டாளர்கள் மாநாடு முடிந்தும், முதலீடுகள் தொடர்கின்றன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த கார்னிங் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன் மற்றும் ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் லிமிடெட் (Optiemus Infracom Limited) ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெடட், காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில், 1003 கோடி ரூபாய் முதலீட்டில் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தித் தொழிற்சாலையைத் தொடங்க உள்ளது. 840 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் இந்தத் தொழிற்சாலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளத்தில், “நம் கைகளில் எப்போதும் இருக்கும் செல்போன்களைப் பாதுகாக்கும் கொரில்லா கிளாஸ்களை உற்பத்தி செய்யும் நிறுவனம், கார்னிங் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “முதலீட்டாளர்கள் மாநாடு முடிந்தும் முதலீடுகள் தொடர்கின்றன. இலக்கை நோக்கி விரைவோம் இளைஞர்கள் துணையோடு உயர்வோம்” என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Direct hire fdh. Essa frase resume a importância da agência nacional de aviação civil no nosso país. Ross & kühne gmbh.