திமுக ஆட்சியில் 12 லட்சம் பெண்களுக்கு ரூ. 70,000 கோடி வங்கிக் கடன்!

மிழ்நாடு முதலமைச்சராக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், மகளிர் முன்னேற்றத்துக்காக தனிக்கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், மகளிர் முன்னேற்றத்துக்காக கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களால் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்திருப்பது தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற முதல் நாளில் போட்ட 5 கையெழுத்துகளில் ஒன்று மகளிர்க்கான கட்டணம் இல்லாப் பேருந்துப் பயணத் திட்டத்துக்கானதுதான். ‘விடியல் பயணம்’ என்ற இந்த திட்டம் மூலம் இதுவரை மகளிர் 445 கோடி முறை பயணம் செய்து பயனடைந்திருப்பதாகவும், இந்த திட்டத்தினால் பயனடைந்த ஒவ்வொரு பெண்ணும் மாதம் ரூ. 8,88 வரை சேமிக்கும் வாய்ப்பை பெற்றிருப்பதாகவும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், வருமானம் இன்றிச் சிரமப்படும் ஏழை மகளிரின் துயர் துடைத்திட, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, 1 கோடியே 16 லட்சம் மகளிர்க்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. பெண்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த திட்டத்தைப் பார்த்து, கர்நாடக மாநில அரசும் தங்கள் மாநிலத்தில் செயல்படுத்தி வருகிறது.

அடுத்ததாக, அரசுப் பள்ளிகளில் படித்துக் கல்லூரியில் சேரும் மகளிர்க்குப் “புதுமைப் பெண்” திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 4,81,705 கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில், இளம் பெண்கள் மத்தியில் இந்த திட்டம் தன்னம்பிக்கை உணர்வை ஊட்டியுள்ளது.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற 2021 மே மாதம் முதல் இதுவரை மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 12 லட்சம் பெண்களுக்கு 70,000 கோடி ரூபாய் வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மகளிர் இடையே சொந்தக் காலில் நிற்கும் தன்னம்பிக்கையும் தைரியமும் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பணிபுரியும் மகளிர் ஆங்காங்கே எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளை அகற்றி, அவர்களுக்கிடையே பாதுகாப்பு உணர்வை வளர்த்திட, மாநிலம் முழுவதும் 97 கோடி ரூபாயில் 16 பணி புரியும் மகளிர் விடுதிகளை அமைத்திடவும் உத்தரவிட்டுள்ளார் மு.க. ஸ்டாலின்.

மேலும், முக்கிய விருந்தினர்கள் வரும் வழிகளில் காவல்துறையில் பணியாற்றும் மகளிரைப் பாதுகாப்பிற்காக நெடுநேரம் நிறுத்துவது கூடாது என ஆணையிட்டு, அவர்களை இலகுவான பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்ற உத்தரவால், மகளிர் காவலர்களின் நீண்ட கால பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட்டது. கூடவே பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில், கடந்த மூன்றாண்டுகளில் ரூ. 218 கோடியே 88 லட்சம் பெண் குழந்தைகள் பயனடைந்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Anonymous case studies :. Hotel deals best prices guaranteed roam partner.