Amazing Tamilnadu – Tamil News Updates

தமிழக மின் தேவை: வியக்க வைக்கும் சூரிய சக்தி, காற்றாலை மின்சார பங்களிப்பு!

மிழக மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் சூரிய சக்தி, காற்றாலை மின்சாரத்தின் பங்களிப்பு வியக்க வைக்கும் வகையில் இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த புதன்கிழமை அன்று, தமிழகத்தின் மொத்த மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான மின்சாரம், பசுமை மின்சாரம் என அழைக்கப்படும் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி மூலம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம், மாநிலத்தின் ஒட்டுமொத்த மின் நுகர்வு 372.226 மில்லியன் யூனிட்களாக (Mu) இருந்த நிலையில், காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்சாரம் கிட்டத்தட்ட 130 மில்லியன் யூனிட் (Mu)அளவுக்கு, பங்களித்துள்ளது.

புதிய உச்சம் தொட்ட காற்றாலை மின் உற்பத்தி

இதில் காற்றாலைகள், இந்த ஆண்டின் அதிகபட்சமான பங்களிப்பாக 105.138 மில்லியன் யூனிட்கள் (Mu)பங்களித்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினத்தின் மின் உற்பத்தியும் இந்த ஆண்டின் புதிய உச்சமாக 5,110 மெகாவாட்டாக எட்டியது. இந்த ஆண்டில் காற்றாலை மின் உற்பத்தி 100 மில்லியன் யூனிட்களைத் தாண்டியது இது மூன்றாவது முறையாகும்.

அதே சமயம், தமிழகத்தின் பல பகுதிகளில் மேகமூட்டம் காரணமாக சூரிய மின் உற்பத்தி 25.8 Mu ஆக இருந்த நிலையில், அதிகபட்ச உற்பத்தி 3,752 மெகாவாட் ஆக காணப்பட்டது. கடந்த சில வாரங்களாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் பெய்த மழையின் காரணமாக உச்சகட்ட மின் தேவை குறைந்துள்ளது.

மாநில மின் நுகர்வு

புதன்கிழமையன்று மாநிலம் முழுவதும் 16,989 மெகாவாட் மின்சாரம் அதிகபட்ச தேவையாக இருந்தது. சென்னையின் அதிகபட்ச தேவை 4,062 மெகாவாட் ஆகவும், நுகர்வு 88.3 Mu ஆகவும் இருந்தது. காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக மிச்சமான மின்சாரம், பரஸ்பர மின் பரிமாற்றத்துக்கு விற்கப்பட்டதாக தமிழக மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த மின்சாரம் ஒரு யூனிட் 10 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

“தமிழகத்தின் தற்போது காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. முன்னர் 108 Mu ஆக இருந்த மின் உற்பத்தி, 110 மில்லியன் யூனிட்டை தாண்டிவிட்டது” “என்கிறார் தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் சங்க தலைமை ஆலோசகர் கே.வெங்கடாசலம். மிக அதிகபட்ச காற்றாலை மின் உற்பத்தி 2023, செப்டம்பர் 10 ல் 5,838 மெகாவாட் ஆக இருந்தது. அதே நேரத்தில் அதிகபட்ச காற்றாலை வெளியேற்றம் 2022 ஜூலை 9 அன்று ஒரு நாளில் 120.25 மில்லியன் யூனிட்டுகளாக இருந்துள்ளது.

இந்தியாவில் இரண்டவது இடம்

இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. சுமார் 13,000 மில்லியன் யூனிட் காற்றாலை மின்சாரம்
ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படுகிறது. இது மாநில நுகர்வில் 9.91% பங்களிப்பு அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version