புதிய வடிவமெடுத்துள்ள ‘மணற்­கேணி செயலி’… மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு எளிதில் தயாராகலாம்! 

மிழ்­நாட்­டில் பயி­லும் அனைத்து மாண­வர்­க­ளும் உயர்­கல்­விக்­குச் செல்­ல­ வேண்­டும் என்­கிற நோக்­கத்­து­ட­னும், அர­சுப் பள்ளி மாண­வர்­கள் உயர்­கல்­விக்­குச் செல்­வதை எளி­தாக்கி, சமூ­கத்­தில் நில­வும் ஏற்­றத்­தாழ்வை சரி­செய்ய வேண்­டும் என்­கிற இலக்­கு­ட­னும் தமிழ்­நாடு அரசு, கடந்த  2023 ஆம் ஆண்­டில் ‘மணற்­கேணி செய­லி’யை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. 

‘மணற்­கேணி செயலி’ புதிய வடி­வம்

இந்த நிலையில், ‘மணற்­கேணி செயலி’ தற்போது புதிய வடி­வ­மெ­டுத்­தி­ருக்­கி­றது. காணொ­லிப் பாடங்­கள் அடங்­கிய மணற்­கே­ணியை, இனி கணி­னித் திரை உட்­பட பல பெரிய திரை­க­ளி­லும் இணை­ய­த­ளத்­தி­லும் காண­லாம். மணற்­கேணி இணை­ய­த­ளத்தை பள்­ளிக் கல்­வித் துறை அமைச்­சர் அன்­பில் மகேஷ் பொய்­யா­மொழி தொடங்கி வைத்­தார்.

இதுவரை, மணற்­கேணி செய­லியை தர­வி­றக்­கம் செய்து அதில் உள்ள பாடங்­களை மாண­வர்­க­ளுக்கு வகுப்­ப­றை­யில் உள்ள ஸ்மார்ட் போர்­டில் திரை­யிட்­டுக் காட்டி பாடங்­களை நடத்தி வந்த ஆசி­ரி­யர்­கள்,  இனி இணை­ய­த­ளம் வாயி­லாக பாடங்­களை நடத்­த­லாம். காட்­சி ­ரீ­தி­யாக பாடங்­கள் இருப்­ப­தால் மாண­வர்­க­ளுக்கு கற்­றல் மேலும் எளி­தா­கும்.

உல­கின் எந்த எந்த மூலை­யில் இருந்­தும் பயன்­ப­டுத்­தலாம்

மணற்­கேணி செயலி, உல­கின் எந்த எந்த மூலை­யில் இருந்­தும் ஆசி­ரி­யர்­கள் மாண­வர்­கள் என எவர் வேண்­டு­மா­னா­லும் பயன்­ப­டுத்­தும் வகை­யில், ஓபன் சோர்ஸ் ஆக வெளி­யி­டப்­பட்­டது. இப்­போது இணை­ய­த­ளம் மூல­மா­க­வும் பயன்­ப­டுத்­த­லாம் என்­ப­தால், அலை­பேசி வாயி­லா­க­வும் கணினி வாயி­லா­க­வும் இதனைப் பயன்­ப­டுத்­த­லாம்.

இணை­ய­த­ளத்­தில் தமி­ழ், ஆங்­கி­லம் என இரு மொழி­க­ளி­லும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாநி­லப் பாடத்­திட்­டத்­தில் உள்ள பாடங்­களை பல பாடப்­பொ­ருள்­க­ளாக, வகுப்­பு­கள் தாண்டி வகை­பி­ரித்து, அதற்­கேற்­ற­படி காணொலி வாயி­லான விளக்­கங்­களை உரு­வாக்கி அளித்­தி­ருக்­கி­றது கல்வி, ஆராய்ச்சி மற்­றும் பயிற்­சிக்­கான மாநில கவுன்­சில் (எஸ்.சி.இ.ஆர்.டி) நிறு­வ­னம். இதன்­கீழ் உரு­வாக்­கப்­பட்­டுள்ள காணொ­லி­ கள் பாடப்­பொ­ருள்­க­ளா­கத் தொகுக்­கப்­பட்­டுள்­ளன.

6, 7, 8, 11, 12 ஆகிய வகுப்­பு­க­ளுக்­கான அறி­வி­யல், கணி­தம், ஆங்­கி­லம், இயற்­பி­யல், வேதி­யல், தாவ­ர­வி­யல், விலங்­கி­யல் ஆகிய பாடங்­க­ளில் முதற்­கட்­ட­ மாக பாடப்­பொ­ருள்­கள் காணொ­லி­யாக தரப்­பட்­டுள்­ளன.

போட்டித் தேர்வுக்கு எளிதில் தயாராக முடியும்

மணற்­கே­ணி­யில் உள்ள காணொ­லிப் பாடங்­கள், முறை­யான கற்­றல் பய­ணத்­திற்கு வழி­வ­குக்­கின்­றன. Laddered Learning approach எனப்­ப­டும் அணு­கு­முறை இதில் கையா­ளப்­பட்­டுள்­ளது. எடுத்­துக்­காட்­டாக, பன்­னி­ரண்­டாம் வகுப்­பில் வரும் ஒரு பாடப்­பொ­ருளை முறை­யா­கப் புரிந்து கொள்ள ஆறாம் வகுப்­பில் அதற்­கான அடிப்­ப­டைப் பாடம் இருக்­கி­றது என்­றால், அதைப் படித்­துப் புரிந்­து­ கொண்­டு­விட்டு, பின் ஏழாம் வகுப்­பில் அது குறித்­துப் பாட­மி­ருந்­தால் அதை­யும் படித்­து­விட்டு, படிப்­ப­டி­யாக பன்­னி­ரண்­டாம் வகுப்­புப் பாடப்­பொ­ரு­ளுக்கு வர­லாம். இதன்­மூ­லம் பாடங்­களை எளி­தில் புரிந்­து­கொள்­வ­தற்­கும் எதை­யும் விட்­டு­வி­டா­மல் படிப்­ப­தற்­கும் வசதி செய்­யப்­பட்­டுள்­ளது.

JEE தேர்வு

இப்­ப­டிப் பயிற்­று­விப்­ப­தன் வாயி­லாக பொதுத் தேர்­வில் கேட்­கப்­ப­டும் எந்த வகை­யான கேள்­வி­க­ளுக்­கும் மாண­வர்­கள் எளி­தாக விடை­ய­ளிக்க முடி­யும். அது மட்­டு­மல்­லா­மல் ஜே.ஈ.ஈ போன்ற அகில இந்­திய நுழை­வுத் தேர்­வு­க­ளுக்­கும் எளி­தில் தயா­ராக முடி­யும். கடந்த பல ஆண்­டு­ க­ளில் கேட்­கப்­பட்ட வினாக்­கள் அடங்­கிய வினா- விடை வங்கி ஒன்­றும் உண்டு.

இந்­தக் காணொ­லி­கள் 2டி மற்­றும் 3டி அனி­மே­ஷன் கொண்டு உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன என்­ப­தால் கற்­போர் உட­ன­டி­யா­கப் புரிந்து கொள்­ள­லாம்.

மணற்­கேணி இணை­ய­தள முக­வரி :

https://manarkeni.tnschools.gov.in

அலை­பே­சி­யில் மணற்­கேணி செய­லியை ப்ளே ஸ்டோரில் தேட­வேண்­டு­மெ­னில், TNSED Manarkeni என்று உள்­ளீடு செய்து தேட­வேண்­டும் எனப்  பள்ளிக் கல்வித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

En direct guerre au proche orient : après la mort de 4 soldats israeliens, …. Br450c ef stihl archives startekbv de bron van groene innovatie. Bûches calorifiques woodstock 1 palette , sacs de 5 bûches.