சொந்தமாகத் தொழில் நிறுவனங்கள் மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் நடத்துபவர்களில் பலருக்கு அரசு ஒப்பந்தத்தை எப்படிப் பெறுவது? அதற்காக அரசு அறிவிக்கும் டெண்டரில் எப்படிப் பங்கேற்பது என்பது போன்ற விபரங்கள் தெரிவதில்லை.
அத்தகைய தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு, டெண்டர் தொடர்பான வழிமுறைகள் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் ஒன்றை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதற்கு தொழில்முனைவோருக்கான டெண்டர் வழிமுறைகள் தொடர்பான பயிற்சி என்று பெயர்.
பயிற்சி தேதி
சென்னை, ஈக்காட்டுத் தாங்கல் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில், வரும் 21 ஆம் தேதியன்று இந்தப் பயிற்சி நடைபெற உள்ளது.
வயது, கல்வித் தகுதி
இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் சிறு குறு நடுத்தர நிறுவன உரிமையாளர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நிறுவனம் சொந்தமாக இல்லாதவர்கள் இந்தப் பயிற்சியில் சேர ஆர்வமுடையவர்களாக இருந்தால், அவர்களும் விண்ணப்பிக்கலாம். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
பயற்சிக்கு விண்ணப்பிப்போர் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். www.editn.in என்ற இணையதளத்திற்குச் சென்று பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.
தங்கும் விடுதி
சென்னையைச் சாராத வெளியூரில் இருந்து வந்து பயிற்சியில் சேருபவர்களுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதியும் உள்ளது. இந்தப் பயிற்சி குறித்த அனைத்து விபரங்களையும் மேற்கண்ட இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்புகொள்ள…
திங்கள் முதல் வெள்ளி வரையில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரையில் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தை நேரிலும் தொடர்பு கொள்ளலாம். 9677152265 / 7010143022 / 9841336033 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இந்தப் பயிற்சியை முடிப்பவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.