அசர வைக்கும் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்… ஒவ்வொரு ஆண்டும்100% எட்ட தீவிரம்!

மிழ்நாட்டில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. இதில் பல மாவட்டங்களில் அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை எட்டி சாதித்துள்ளன.

‘அரசுப்பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல அது பெருமையின் அடையாளம்’ என்பதை தொடர்ந்து பறைசாற்றும் விதமாக நடப்புக் கல்வியாண்டின் பொதுத் தேர்வு முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.

மேல் நிலைத் தேர்வில் (HSC +2), 94.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளில் மட்டும் 91.02 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக 397 அரசு மேல்நிலைப் பள்ளிகள் இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி விழுக்காட்டை எட்டி சாதனைப் படைத்துள்ளனர். மேலும், தமிழ்ப் பாடத்தில் 35 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

வெற்றிகளுக்கு காரணமான முதலமைச்சரின் திட்டங்கள்

இடைநிலைப் பள்ளி பொதுத்தேர்வில் (SSLC) 91.55 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 87.90 ஆகும். 1364 அரசுப் பள்ளிகள் இந்த ஆண்டு 100 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளன. தமிழ் பாடத்தில் மட்டும் 100 சதவீத மதிப்பெண் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை 8 ஆகும். ஆக மொத்தம் 12 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் (397+1364) 1761 பள்ளிகள் இவ்வாண்டு 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன. இது ஒரு வரலாற்று சாதனையாகும். பள்ளிக் கல்வித் துறை வரலாற்றில் மேலும் ஒர் மைல்கல் ஆகும்.

இத்தனை வெற்றிகளுக்கும் காரணம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பல்வேறு மாணவர் மைய திட்டங்களும், சிறப்பான வழி காட்டல்களும் ஆகும் எனத் தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

தலைமை ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா

இந்த நிலையில், இப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டும் வண்ணம் சென்னையில் ஒரு சீர்மீகு விழா நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அவ்விழாவில் தமிழ்ப்பாடத்தில் 100 சதவீதம் மதிப்பெண் பெற்ற பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு (8+35) 43 மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளார்கள்.

​இப்பாராட்டு விழாவின் போது ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற (Last 5 Places) 5 தலைமை ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்குவதுடன், 100 சதவீதம் எட்டிய தலைமை ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் செய்து கருத்துகள் பரிமாற்றம் ஏற்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் மேலும் அவர்களுக்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும்.

100% தேர்ச்சி இலக்கை நோக்கி…

இந்த நடவடிக்கைகள் அனைத்தும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் ஒவ்வொரு ஆண்டிலும் 100 சதவீத தேர்ச்சியை எட்ட வேண்டும் என்ற இலக்கை நோக்கிய செயல்பாடுகள் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Une alerte enlèvement déclenchée pour retrouver santiago, un bébé de 17 jours disparu à aulnay sous bois. But іѕ іt juѕt an асt ?. Hest blå tunge.