‘அரசு வேலை… ஊக்கத்தொகை அதிகரிப்பு… பல்கலைக்கழகம்’ – தமிழக விளையாட்டு வீரர்களுக்கு அசத்தல் அறிவிப்புகள்!

மிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், விளையாட்டுத் துறையை மேம்படுத்தவும் வீரர் வீராங்கனைகளை ஊக்குவிக்கவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தமிழக சட்டசபையில் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கான மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அந்த துறையின் அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், தமிழ்நாட்டின் சார்பாக பங்கேற்று வெற்றி பெற்ற 100 வீர்களுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் பணி ஆணை வழங்கப்படும்.

டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ரூ.100 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.

ஊக்கத் தொகை உயர்வு

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் 16 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான ஊக்கத் தொகை ரூ. 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் (Champions Development Scheme) கீழ், ஒரு விளையாட்டு வீரருக்கு ஆண்டொன்றிற்கு வழங்கப்பட்டு வரும் நிதி உதவி, ரூபாய் 2 இலட்சத்திலிருந்து ரூபாய் 4 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

STDT ஆல் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்களுக்கான மானியம், ஒலிம்பிக் விளையாட்டிற்கு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாகவும், ஒலிம்பிக் அல்லாது விளையாட்டிற்கு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாகவும் உயர்த்தப்படும்.

SDATயின் கீழ் இயங்கும் விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை, 2600 ஆக உயர்த்தப்படும். மேலும், உணவுப்படி ரூ.250லிருந்து 350 ஆகவும்,சீருடை மானியத் தொகை ரூ.4000 லிருந்து ரூ.6000 ஆகவும், உபகரண மானியத் தொகை ரூ.1000லிருந்து ரூ.2000 ஆகவும் உயர்த்தப்படும்.

விளையாட்டு பல்கலைக்கழகம்/சிறுவிளையாட்டரங்கங்கள்

22 சட்டமன்றத் தொகுதிகளில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கங்கள் ரூ.66 கோடியில் அமைக்கப்படும்.

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்படும். மேலக்கோட்டையூரில் Fencing, Badminton, Cycling, Archery மற்றும் Table Tennis ஆகிய விளையாட்டுக்களுக்கும், நுங்கம்பாக்கத்தில் உள்ள SDATடென்னிஸ் விளையாட்டரங்கில் Tennis விளையாட்டிற்கும் வேளச்சேரியில் உள்ள S D A T A G B வளாகத்தில் Swimming மற்றும் Gymnastics விளையாட்டுக்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மையம் அமைக்கப்படும்.

தலைசிறந்த பயிற்சியாளர்கள்

தலைசிறந்த பத்து விளையாட்டு வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் Expert Coaches-ஆக பணியமர்த்தப்படுவர். சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில், நவீன வசதிகளுடன்கூடிய உயர் செயல்திறன் மாணவர் விடுதி ரூபாய் 25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளம்

மதுரை மாட்டத்தில், புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் அகாடமியில் Diving Pool உடன் கூடிய ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளம் மற்றும் கரூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்படும். அரியலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு வளாகத்தில், செயற்கை இழை HOCKEY ஆடுகளம் அமைக்கப்படும். அனைத்து மாவட்ட விளையாட்டு வாளகங்களில் உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள், குளிர்சாதன வசதிகளுடன் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும்.

விளையாட்டு விடுதி

சென்னை மேயர் இராதாகிருஷ்ணன் H o c k e y விளையாட்டு அரங்கில் H o c k e y விளையாட்டிற்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கைப்பந்து மற்றும் கபடி ஆகிய விளையாட்டுகளுக்கான கல்லூரி மாணவியர்களுக்கு சிறப்பு நிலை விளையாட்டு விடுதியும் (Sports Hostel of Excellence ), கோயம்புத்தூர் மாவட்டத்தில், நவீன வசதிகள் கூடிய புதிய விளையாட்டு விடுதியும் (Sports Hostel) அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட மேலும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் உதயநிதி ஸ்டாலின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Une alerte enlèvement déclenchée pour retrouver santiago, un bébé de 17 jours disparu à aulnay sous bois. Un реасеkеереrѕ іn lebanon ѕау iѕrаеl hаѕ fіrеd on thеіr bаѕеѕ deliberately. 500 dkk pr.