தமிழக அரசுப் பள்ளிகளில் ரூ. 1,000 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள்… புதிய கல்வியாண்டில் புதிய தொடக்கம்!

ல்வி கற்பதும் கற்றுக்கொடுப்பதும் டிஜிட்டல் மயமாகிவிட்ட இன்றைய சூழ்நிலையில், வகுப்பறைகளையும் அதற்கேற்ப நவீனப்படுத்துவதும் அவசியமாகிவிட்டது.

அந்த வகையில், காலமாற்றத்துக்கேற்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசு தொடக்கப் பள்ளிகளின் வகுப்பறைகளை, வருகிற கல்வியாண்டு முதல் ‘ஸ்மார்ட் க்ளாஸ்’ ஆக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

23,000 தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டுகள்

வருகிற ஜூன் மாதம், புதிய கல்வியாண்டு தொடங்கும் போது, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் தொடக்கப் பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி வளாகங்களில் ஸ்மார்ட் போர்டுகளைப் பெறுவார்கள். மாநிலம் முழுவதும் 23,000 தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டுகள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது.

பிராட்பேண்ட் இணைப்புகள்

இது தவிர, 8,000 பள்ளிகளுக்கு இணையதள வசதிக்காக பிராட்பேண்ட் இணைப்புகளும் வழங்கப்பட உள்ளன. இதில் 50 சதவீத பணிகள், வருகிற ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்

இதேபோல், உயர்தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்கப்பட உள்ள அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கு தேவையான கம்ப்யூட்டர் மற்றும் அதற்கான சாதனங்களும் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

அதேபோன்று நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. ஒவ்வொரு பள்ளிக்கும் சுமார் 10 ஆய்வகங்கள் அமைக்கப்படும். இந்த வகையில் சுமார் 8,000 பள்ளிகள் பயன்பெறும் என்கிறார் தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் ஐஏஎஸ்.

“இந்த ஆய்வகங்களில் மாணவர்கள் இப்போது கோடிங், பைதான் மற்றும் பிற நிரலாக்க மொழிகளைக் கற்றுக்கொள்ளலாம். இன்று, பெரும்பாலான மாணவர்கள் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளைத் தேர்வு செய்கிறார்கள். இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் மனித மூலதனமாக தமிழ்நாடு உள்ளது. மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த துறையால் உள்வாங்கப்படுகிறார்கள். எனவே, சிறு வயதிலிருந்தே மாணவர்கள் தகவல் தொழில் நுட்ப திறன்களைக் கற்றுக்கொள்வது அவர்களுக்கு உதவும் ” என்கிறார் அவர்.

80,000 ஆசிரியர்களுக்கு ‘கைக்கணினி’

இதனிடையே அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 80,000 ஆசிரியர்களுக்கு ‘கைக்கணினி’ (Tablets) வழங்கப்பட உள்ளது. ஆன்லைன் வருகைப் பதிவு, பாடங்கள் எந்த அளவுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது போன்ற விவரங்களைப் பதிவிடுவது, கற்றலுக்கான கூடுதல் பாடக்குறிப்புகள் விவரங்களைத் தெரிந்துகொள்வது போன்றவற்றுக்காக ஆசிரியர்களுக்கு இந்த டேப்லெட் கணினிகள் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை இணைக்கும் பொதுவான ஆன்லைன் தளமான கல்வி மேலாண்மை தகவல் அமைப்பையும் (EMIS) அவர்கள் இயக்குவார்கள். மேலும், ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் தேவையான வீடியோ டுடோரியல்களும் ஏற்றப்படும்.

டேப்லெட்களின் configuration ( கட்டமைப்பு), வேகமான மொபைல் இணைய அனுபவத்தை வழங்கும் வகையில் 2G, 3G, 4G LTE சப்போர்ட்டுடன் இருக்கும்.இந்த அனைத்து முயற்சிகளுக்கான மொத்த முதலீடுகள் சுமார் 1,100 கோடி ரூபாய் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Characters of domestic helper | 健樂護理有限公司 kl home care ltd. A anm mantém um banco de dados com informações sobre os recursos minerais do brasil. / kempener straße.