Amazing Tamilnadu – Tamil News Updates

தமிழகத்தில் கோடை மழையின் ‘கருணை’ இன்னும் எத்தனை நாட்களுக்கு..?

மிழ்நாட்டில், கடந்த மார்ச் மாதம் முதலே கோடை வெயிலின் வெப்பம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், ஏப்ரல் மாதத்தில் வெப்ப நிலை மிக அதிகமாக காணப்பட்டது.

மாநிலம் முழுதும் கடும் வெயில் வாட்டியதுடன், வெப்ப அலையும் தாக்கியதால், பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். 15 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியது.

இது ஒருபுறமிருக்க, கத்திரிவெயில் எனப்படும் அக்னி நட்சத்திரமும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தொடங்கிய நிலையில், அது வரும் 28 ஆம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டதால், மக்கள் மேலும் அச்சத்துக்கு ஆளாகினர். அதற்கேற்ப வெப்ப அலையின் கடுமையும் அதிகமாகத் தொடங்கியது.

கருணை காட்டிய வருண பகவான்

இந்த நிலையில் தான், வருண பகவான் மக்கள் மீது இரக்கம் காட்டியதைத் தொடர்ந்து, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல இடங்களில் கோடை மழை பெய்தது. இதனால், ஒரு மாதத்துக்கும் மேலாக கடுமையாக காணப்பட்ட வெப்பம் தணிந்து, ஓரளவு குளிர்ந்த நிலை காணப்பட்டதால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இருப்பினும், இந்த நிலை தொடருமா இல்லை மீண்டும் கோடை வெயில் கொளுத்த தொடங்குமா என மக்களிடையே அச்சம் நிலவிய சூழலில், ஆறுதல் அளிக்கும் வகையில், வருண பகவானின் கருணை இன்னும் சில தினங்களுக்குத் தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கோடை மழை நீடிக்கும்

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், அடுத்த ஏழு தினங்களுக்கு விடுத்துள்ள வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை வருமாறு:

09.05.2024

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், தேனி, தென்காசி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

10.05.2024

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 11.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

12.05.2024

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

13.05.2024

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.14.05.2024 மற்றும் 15.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version