குறைந்த கட்டணத்தில் கல்யாண மண்டபம்!

சென்னை வாசிகளுக்கு ஒரு இனிப்பான செய்தியை வழங்கி இருக்கிறது பெருநகர சென்னை மாநகராட்சி!

நம் வீட்டில் நடக்கும் திருமணம், வரவேற்பு, நிச்சயதார்த்தம், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் போன்ற விழாக்களுக்கு ‘ஹால்’ புக் செய்வது பெரும்பாடாக இருக்கும். அதிக அளவில் பணம் செலவு செய்தால், பெரிய வசதியான ஹால் கிடைக்கலாம். வசதி படைத்தவர்களுக்கும் உயர் நடுத்தர வகுப்பினருக்கும் இது சாத்தியம்.

நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் சாதாரண மக்களுக்கு அவர்களின் வசதிக்கு ஏற்ற வகையில் தேட வேண்டுமென்றால் சென்னை கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான கம்யூனிட்டி ஹால்கள்தான் பொருத்தமாக இருக்கும். அவற்றிற்கான கட்டணமும் பட்ஜெட்டிற்குள் இருக்கும்.

100 பேரில் ஆரம்பித்து, சுமார் 1000 பேர் வரையில் கெப்பாசிட்டி கொண்ட கம்யூனிட்டி ஹால்கள் உள்ளன. சென்னையில் கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான ஹாலில் பெரியது ஷெனாய் நகரில் இருப்பதுதான். 896 பேர் அமரக்கூடிய இந்த ஹால் முழு ஏசி வசதிகொண்டது. கார் பார்க்கிங் வசதி உள்ளது. இந்த ஹாலுக்கு ஒரு நாள் வாடகை 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய். பாதி நாள் என்றால் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்.

இது போன்ற பெரிய ஹால்கள் தவிர சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஹால்களும் உள்ளன. 100 பேர் அமரக் கூடிய அளவிலான ஹால்களுக்கு ஒரு நாள் கட்டணம் 1500 ரூபாய். இப்படிக் குறைந்த பட்சம் ரூ.1500 ல் ஆரம்பித்து நாம் மேற்சொன்ன 2 லட்சம் வரையிலான கட்டணங்களில், நமது தேவைக்கேற்ற ஹால்களை சென்னை கார்ப்பரேஷன் வாடகைக்குத் தருகிறது.

இத்தகைய ஹால்கள் புக் செய்யும் போது சமையலுக்குத் தேவையான பாத்திரங்கள், அமர்வதற்கு சேர்கள் உள்ளிட்ட இதர பொருட்களையும் நாம் சேர்த்து புக் செய்து கொள்ளலாம்.

இத்தகைய கம்யூனிட்டி ஹால்களை பின்வரும் இணையதளத்திற்குச் சென்று, ஆன்லைனில் எளிதாக புக் செய்து கொள்ளலாம். https://chennaicorporation.gov.in/onlinebooking/communityhallcheckNew.do?do=showCheckList

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

二、新北市:healthy new taipei 社群. meet marry murder. 자동차 생활 이야기.