எப்படி இருக்கு ‘கேப்டன் மில்லர்’? தனுஷின் ‘இதுவரை பார்த்திராத’ அவதாரம்!

னுஷ் நடிப்பில், ‘ராக்கி’ புகழ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் மில்லர்’ திரைப்படம் ரசிகர்களுக்கான பொங்கல் விருந்தாக இன்று வெளியாகி உள்ளது. இந்த நிலையில், தனுஷ் இப்படத்தில் இதுவரை பார்த்திராத ஒரு அவதாரத்தை எடுத்திருப்பதாக ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்திப் கிஷன், நிவேதிதா சதீஷ் , காளி வெங்கட், அதிதி பாலன், வினோஷ் கிஷன் என மேலும் பலர் நடித்துள்ள இப்படத்துக்கு இசை ஜி.வி.பிரகாஷ்குமார். 1930 களில் நடக்கும் பீரியட் கம் ஆக்சன் மூவியாக எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்துக்கு, காலையிலிருந்து சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் விமர்சர்கள் தங்களது X தளத்தில் பதிவிட்டிருக்கும் சில விமர்சனங்கள் இங்கே…

நடிகை பிரியங்கா மோகன்

கடைசியில் ‘கேப்டன் மில்லரின்’ மேஜிக்கை நீங்கள் அனைவரும் காணும் நாள் வந்துவிட்டது. இதுபோன்ற ஒரு அற்புதமான படத்தில் நானும் இடம்பெற்றிருப்பதற்காகவும், ஒரு சிறந்த டீமுடன் பணிபுரிந்ததற்காகவும் மிகவும் மகிழ்ச்சியும் நன்றியும். நீங்கள் ஒவ்வொருவரும் திரையரங்குகளில் இந்த திரைப்படத்தை ரசிப்பீர்கள்.

Karthik@meet_tk

தனுஷ் என்ன ஒரு நடிகர்..? கோலிவுட் இப்படிப்பட்ட ஒரு இயல்பான நடிகரால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது. First Half : உங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்து, நல்ல தியேட்டரில் பாருங்கள்.

சினிமா தயாரிப்பாளர் G Dhananjeyan@Dhananjayang

‘கேப்டன் மில்லர்’ டைரக்டர் அருண்மாதேஷ்வரனின் அற்புதமான மிகப்பெரிய முயற்சி. 1930- களின் வலுவான கலகக் கதையுடன் படத்தைக் கொண்டுவந்துள்ளார்.

தனுஷ் மீண்டும் ஒரு சிறந்த நடிப்பைத் தந்துள்ளார். He is on fire.

பிரியங்காமோகன் பாத்திரம் புத்திசாலித்தனமாக உள்ளது.

நம்ம சிவாண்ணா (சிவராஜ் குமார்) சார், சந்தீப் கிஷன் ஆகியோர் படத்தின் பெரிய பலம்.

ஜி.வி. பிரகாஷின் அற்புதமான BGM கதைக்கு வலுவான வேகத்தை சேர்க்கிறது.

இப்படி ஒரு மாஸான படத்தைக் கொடுத்ததற்காக தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் சாருக்கும் சத்யஜோதி பிலிம்ஸ்-க்கும் வாழ்த்துக்கள். அனைவரும் கட்டாயம் பெரிய திரையில் பார்க்க வேண்டிய படம்.

@VenkyVikyViews

“ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்குப் பிறகு கோலிவுட்டின் அடுத்த பெரிய நடிகர் தனுஷ் ஆகத்தான் இருக்க வேண்டும். என்ன ஒரு அற்புதமான நடிகர் அவர்? அவரைக் கொண்டாடி அவரை உயர்த்துவது நல்லது.

Stalwart@One_man_show17

தனுஷ் என்ட்ரி மாஸ்.

அருமையான ஸ்க்ரீன்ப்ளே.

இன்டர்வெல் ஃபைட் மாஸ், ஒளிப்பதிவும் அபாரம்!

AmuthaBharathi@CinemaWithAB

முதல் பாதி Fun & Emotions. இரண்டாம் பாதியில் lags (பின்னடைவு).

சிவகார்த்திகேயன் & ஏலியன் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது.

வில்லன் கதாபாத்திரத்தை நன்றாக வடிவமைத்திருக்கலாம்.

க்ளைமாக்ஸ் அருமை.

குழந்தைகள் மற்றும் குடும்பமாக வருபவர்களுக்கு இந்த படம் அதிகம் பிடிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

En direct guerre au proche orient : après la mort de 4 soldats israeliens, …. Wees de eerste om “thermische versnipperaar maestro land eliet” te beoordelen. Je resterais fidèle à ecoboisconfort par patrice h.