உடல் நலமில்லையா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுவாரஸ்யமான பதில்!
சென்னை நந்தம் பாக்கம் வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் தின விழா நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர், ‘எனக்கு உடல் நலமில்லை…உற்சாகமாக இல்லை…’ என்று ஒரு பத்திரிகையில் எழுதி இருந்தார்கள். அதை படித்தபோது எனக்கு சிரிப்புதான் வந்தது என்றார்.
எனக்கு என்ன குறை? என்று கேட்ட அவர், தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருக்கின்றபோது, அதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்? என்றார்.
“நேற்று ஒரு வீடியோ பார்த்தேன். சென்னையைச் சேர்ந்த ஒரு சகோதரி பேசுகிறார்.. ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகையில் ஆயிரம் ரூபாய் வந்துவிட்டது. பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வந்துவிட்டது. அரிசி, சர்க்கரை, கரும்பு வந்துவிட்டது… வெள்ள நிவாரணமாக ஆறாயிரம் ரூபாய்
கிடைத்துவிட்டது. ஒரு மாதத்தில் முதலமைச்சரே எட்டாயிரம் ரூபாய்
கொடுத்துவிட்டார். பொங்கலுக்கு, யாரையும் நான் எதிர்பார்க்கத்
தேவையில்லை ‘என்று பேட்டி கொடுத்திருக்கிறார் அந்த சகோதரி. அவர்
முகத்தில் பார்க்கின்ற மகிழ்ச்சிதான் எனக்கான உற்சாக மருந்து!
எனக்கு மக்களைப் பற்றிதான் எப்போதும் நினைப்பே தவிர,
என்னைப் பற்றி இருந்தது இல்லை. எந்த சூழலிலும், மக்களோடு
இருப்பவன் நான். என் சக்தியை மீறியும் உழைப்பவன் நான்.
இதுமாதிரியான செய்திகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, உழைத்துக்
கொண்டே இருப்பேன்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் கூறினார்.