உடனடியாக உதவிக்கரம் நீட்டிய உதயநிதி… பார்வைக் குறைபாடு பேராசிரியரின் நெகிழ்ச்சி தகவல்!

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத பெய்த கனமழையாலும், அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கத்தாலும் மக்கள் எதிர்கொண்ட பிரச்னைகளை கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களின் வாயிலாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். எண்ணற்ற ஆடு, மாடு, நாய்கள் என கால்நடைகளையு இந்த மழை வெள்ளம் விட்டுவைக்கவில்லை. தற்போது தென் மாவட்ட மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.

அரசு அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் எனப் பலரும் களத்திலிருந்து பொதுமக்களுக்கு உறுதுணையாக இருந்துவருகினறனர். அந்த வகையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டவர்கள் இரவு பகலாக களத்தில் இறங்கி வெள்ள மீட்புப் பணி முதல் நிவாரணங்கள் வழங்குவது வரை தென் மாவட்டங்களிலிருந்து அனைத்து வேலைகளையும் சிறப்பாகச் செய்துவருகின்றனர்.

நிவாரண நிதி வழங்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நேற்று கூட திருநெல்வேலியில் வெள்ளத்தால் உயிரிழந்த நபர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் நிவாரண நிதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குப் பெய்த இந்த மழையிலிருந்தும், அதனால் ஏற்பட்ட வெள்ளத்திலிருந்தும் பொதுமக்களைத் தமிழக அரசு சிறப்பாகக் கையாண்டு மீட்டது என்கிறார்கள் தென் மாவட்ட மக்கள்.

அந்தவகையில், திருநெல்வேலியில் பிரபல கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் மருத்துவர் கதிர் என்பவர், வெள்ளத்தின் போது தனக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழலில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட்டிய உதவிக்கரம் குறித்துக் கூறிய விஷயங்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“இங்கு பெய்த கனமழையால் என் வீட்டைச் சுற்றி தண்ணீர் வரத் தொடங்கியது. நெட் ஒர்க் முழுவதுமாக துண்டிக்கப்பட்டதால் யாரையும் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. பார்வைத் திறன் குறைபாடு உள்ள நான், எனக்குத் தெரிந்த ஆராய்ச்சியாளர்கள் குழுக்களுக்கும், சமூக வலைத்தளங்களிலும் நிலைமை குறித்துப் பதிவிட்டிருந்தேன். தண்ணீர் மிகவும் அதிகமாக இருந்ததனால் கடும் சிரமத்திற்கு ஆளானேன்.

பேராசிரியர் கதிர்

பாம்பு, பூச்சிகள் வரத் தொடங்கின. இந்த தகவல்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட சிறிது நேரத்திலேயே, மதிப்பிற்குரிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தனி உதவியாளர் என்னைத் தொடர்பு கொண்டு நிலைமை குறித்து விசாரித்தார். அதன்பிறகு ஒரு மணி நேரத்திற்குள் அதிகாரிகள் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார்கள். தண்ணீரை வெளியேற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். மிகவும் சிக்கலிலிருந்த என்னைக் காப்பாற்ற அரசு எடுத்த உடனடி நடவடிக்கையைப் பாராட்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் கதிர் மட்டும் அல்ல. கதிரை போலப் பல நூறு பேரைத் தமிழக அரசு நிர்வாகம் சிறப்பாகக் கையாண்டு மீட்டது என்று சொன்னால் மிகையாகாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

二、新北市:healthy new taipei 社群. The real housewives of potomac recap for 8/1/2021. : 작은 프로젝트부터 시작할 수 있는 플랫폼.