ஆசிய விளையாட்டு: கபடியில் தங்கம் வென்ற இந்தியா!

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், கபடி பெண்கள் பிரிவில் தங்கம் வென்றதைத் தொடர்ந்து, பதக்கப்பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

கபடி பெண்கள் பிரிவில் இந்தியா, சீன தை பே அணியை போராடி 26-24 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது.

இது இந்தியாவுக்கு 100-வது பதக்கமாக அமைந்தது. ஏற்கனவே, வில்வித்தை யில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, வெண்கலம் வென்றுள்ளது.

இந்திய அணி இதுவரை 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 100 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இதன் மூலம், பதக்கப்பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2020 leroy agency press + direct news today + 1 news today broadcasting + erika leroy de saxe. Husqvarna tr348 achterfrees tiller startekbv de bron van groene innovatie. Poêle mixte invicta.