Amazing Tamilnadu – Tamil News Updates

அடுக்குமாடி வீடுகளுக்கான மின் கட்டணம் குறைப்பு!

மிழ்நாட்டில் திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் அதன் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் நடுத்தர மக்களின் வாழ்வில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். குடிநீர், மலிவு விலையில் வீடுகள், வேலை வாய்ப்புகள், தரமான கல்வி, மருத்துவம் போன்ற மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் மிகுந்த அக்கறைக் காட்டிச் செயல்படும்.

அந்த வகையில், மக்கள் மீது அனுதாபமும் அக்கறையும் கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. மக்களின் பிரச்னைகளை எப்போதும் கேட்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காணும் தலைவராக திகழ்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

அந்த வகையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 10 வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், 3 மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும் உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு மின் கட்டணம் குறைக்கப்படும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

சென்னை மாநகரம் மற்றும் பிற மாநகராட்சிகளை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் சிறு அடுக்குமாடிக் குடியிருப்புகள் (small apartments)உள்ளன. அண்மையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டண முறையை மாற்றி அமைத்தபோது, இந்த குடியிருப்புகளின் பொது விளக்கு வசதிகள், நீர் இறைக்கும் மோட்டார்கள் போன்ற பொதுப் பயன்பாட்டு பணிகளுக்கான மின்கட்டணங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கான கட்டண முறைக்கு மாற்றப்பட்டுள்ளன.

இதனால் பொது வசதிகளுக்கான மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு 8 ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது. இது, இக்குடியிருப்புகளில் வசிக்கக்கூடிய நடுத்தர மக்களை இது பெரிதும் பாதிப்பதாக உள்ளது என்று பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்கள் அரசிடம் முறையிட்டிருந்தன.

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் இன்று நடைபெற்ற செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய 4 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனான கள ஆய்வு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மேற்கூறிய குடியிருப்போர் நலச்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, 10 வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், 3 மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும் உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு, பொதுப் பயன்பாட்டிற்கான புதிய சலுகைக் கட்டணமுறை ஒன்று நடைமுறைப்படுத்தப்படும்” என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார்.

இதனால்,, பொதுப் பயன்பாட்டிற்கு செலுத்தப்பட வேண்டிய மின் கட்டணம் ஒரு யூனிட்டிற்கு 8 ரூபாயிலிருந்து ஐந்து ரூபாய் 50 பைசாவாக குறையும். இதனால் மாநிலம் எங்கும் உள்ள சிறு குடியிருப்புகளில் வசிக்கும் நடுத்தர மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் நலன் சார்ந்து செயல்படும் ஒரு ஆட்சி எப்படி இருக்கும் என்பதற்கும், ஒரு பிரச்னை அதிகரிக்கும் வரை காத்திருக்காமல், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய துரித நடவடிக்கை எடுப்பதிலும் திமுக அரசு முன்னுதாரணமாக திகழ்வது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது!

Exit mobile version