மாற்றுத் திறனாளிகளின் வாகனங்கள் சேதமா? பழுது நீக்க தொடர்பு கொள்ளுங்கள்!

மீபத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தண்ணீரில் மூழ்க்கிய இருசக்கர வாகனங்களும் கார்களும் பெரும் சேதமடைந்தன.

இதே போல மாற்றுத் திறனாளிகளின் வாகனங்களும் சேதமடைந்துள்ளன. அவர்களுக்கு உதவி செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மாற்றுத் திறனாளிகள் தங்களின் ஸ்கூட்டர்கள், மூன்று சக்கர சைக்கிள்கள், சக்கர நாற்காலி மற்றும் மின்கலனால் இயங்கும் சக்கர நாற்காலி போன்ற உபகரணங்கள் பழுதடைந்திருந்தால், பின் வரும் எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களை கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு, உரிய விவரங்களைப் பதிவு செய்யலாம்.

வ. எண் தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் கைப்பேசி எண் தொலைபேசி எண்

1 ) மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், வடசென்னை 9499933589 &
044 – 29993612


2) மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், தென்சென்னை 9499933470 & 044 – 24315758


3) மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், திருவள்ளூர் 9499933496 & 044 – 27662985


4) மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், காஞ்சிபுரம் 9499933582 & 044 – 29998040


5) மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், செங்கல்பட்டு 9499933476 & 044 – 27431853

பெறப்படும் விபரங்களின் அடிப்படையில், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அதன் மூலம் உபகரணங்கள் பழுது நீக்கம் செய்யப்படும் என மாற்றுத் திறனாளிகள் துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Tägliche yacht und boot. hest blå tunge. Overserved with lisa vanderpump.