மாநில கல்விக் கொள்கைக்கான முக்கிய பரிந்துரைகள் என்ன? – விரிவான தகவல்கள்!

த்திய அரசின் கல்விக் கொள்கை குலக்கல்வி திட்டத்துக்கு வழிவகுப்பதாக உள்ளது என்றும், பட்டப்படிப்புகளை 4 ஆண்டுகளாக உயர்த்தி, அதில் பாதியிலேயே வெளியேறினால் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என்பது போன்ற பரிந்துரைகள் உயர்கல்வியிலிருந்து ஏழை எளிய மாணவர்களை வெளியேற்றும் தந்திரமான திட்டம் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில்தான், தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கையைத் தயாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் த. முருகேசன் தலைமையில் தமிழ்நாடு அரசால் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

3, 5, 8 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் கூடாது.

பள்ளிக் கல்வியில் தமிழை முதல் மொழியாக நிலைநிறுத்துவது அவசியம். தொடக்க நிலை முதல் பல்கலைக்கழக நிலை வரை தமிழ் வழிக் கல்வியை வழங்குதல். இருமொழிக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.

3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் இருக்கக்கூடாது. கல்வி மாநில பட்டியலில் வரவேண்டும்.

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர வேண்டும். கல்லூரி சேர்க்கையின்போது 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களுடன் 11 ஆம் வகுப்பு மதிப்பெண்களும் இடம்பெற வேண்டும்.

அங்கன்வாடி மையங்களுக்கு ‘தாய்-குழந்தை பராமரிப்பு மையங்கள்’ எனப் பெயரிட வேண்டும். 5 வயது பூர்த்தியாளர்கள் 1 ஆம் வகுப்பில் சேரலாம். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 6 வயது பூர்த்தியானவர்கள் தான் முதல் வகுப்பில் சேர முடியும்.

தேர்வு கூடாது/ ‘ஸ்போக்கன் தமிழ்’

சிபிஎஸ்இ, Deemed University ஆகியவற்றிக்கான கட்டணங்களை சீரமைப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ தவிர ‘ஸ்போக்கன் தமிழ்’ மீது முதன்மையாக கவனம் செலுத்த வேண்டும். நீட் தேர்வு இருக்கக்கூடாது. நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் விளம்பரப் படுத்துவதை தடை செய்ய வேண்டும். எம்ஜிஆர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மையங்களாக அமைக்க வேண்டும்.

உயர் கல்வி

தமிழ் பல்கலைக்கழகத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டும்.தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரிகள் தமிழ் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சிக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இரு பெற்றோர்களையும் இழந்த மாணவர்களுக்கு உயர் கல்வியில் 1 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

விளையாட்டு வசதிகள்

கிராமப்புற மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு அதிக விளையாட்டு வசதிகள் மற்றும் முறையான பயிற்சி, விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட வேண்டும். போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஆட்சியர் தலைமையில், 1 மனநல ஆலோசகர், 1சுகாதார அதிகாரி, 1 போலீஸ் அதிகாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 1 உறுப்பினர் ஆகியோரைக் கொண்ட தனிக் குழு அமைக்கலாம்.

தனியார் நிர்வாகங்களால் நடத்தப்படும் விளையாட்டுப் பள்ளிகள், முன் தொடக்கப் பள்ளிகள் நர்சரிகள், மழலையர் பள்ளி போன்றவற்றின் செயல்பாட்டைக் கண்காணிப்பதற்காக ஒரு விரிவான ஒழுங்குமுறை உருவாக்கப்படும் என்பது உட்பட பல்வேறு பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Chartering a luxury private yacht or renting a bareboat sailing yacht is easy !. Hest blå tunge. Big brother all stars recap for 9/9/2020 : who won pov ?.