“பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், சிரித்தேன்..!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று காலை சென்னை திரும்பினார்.

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், நாடாளுமன்றத்தில் பிரதமர் உரை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “பார்த்தேன். படித்தேன். ரசித்தேன். சிரித்தேன். ஏனென்றால், அவர் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பிஜேபி தான் எதிர்க்கட்சி போலவும், காங்கிரஸ் ஆளுங்கட்சி போலவும் பேசிக் கொண்டிருக்கிறார். இதுதான் புரியாத புதிராக இருக்கிறது” என்று கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் 400 இடங்களைக் கைப்பற்றுவோம் என மோடி கூறியது குறித்துக் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “400 இடங்கள்தானா? 543 இடங்கள் இருக்கிறது. அதையும் கைப்பற்றுவேன் என்று சொன்னாலும் ஆச்சரியம் இல்லை” என்று பதிலளித்தார்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “மக்களுக்குத் தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன்” என்று பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Microsoft has appointed vaishali kasture. Tonight is a special edition of big brother. fethiye motor yacht rental : the perfect.