திமுக வேட்பாளர் பட்டியலில் 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு ; 21 தொகுதிகளில் போட்டியிடுபவர்கள் முழு விவரம்!

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார் என்ற விவரத்தை இன்று அண்ணா அறிவாலயத்தில் வைத்து முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும், வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதியன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

இதனையொட்டி, வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி மார்ச் 27 வரை நடக்கிறது. மார்ச் 28 ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுவைத் திரும்ப பெற மார்ச் 30 கடைசி தேதி ஆகும். அன்று மாலையே இறுதிகட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்டதைத் தொடர்ந்து, திமுக சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார் என்ற விவரத்தை அண்ணா அறிவாலயத்தில் இன்று வெளியிட்டார்.

திமுக வேட்பாளர்கள் 21 பேர் விவரம் வருமாறு:

ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு

தூத்துக்குடி – கனிமொழி கருணாநிதி

நீலகிரி (தனி) – ஆ.ராசா

மத்திய சென்னை – தயாநிதி மாறன்

அரக்கோணம் – எஸ். ஜெகத்ரட்சகன்

வட சென்னை – டாக்டர் கலாநிதி வீராசாமி

தென் சென்னை – தமிழச்சி தங்கப்பாண்டியன்

காஞ்சிபுரம் ( தனி) – க.செல்வம்

வேலூர் – கதிர் ஆனந்த்

தருமபுரி – வழக்கறிஞர் அ.மணி

திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை

ஆரணி – தரணி வேந்தன்

கள்ளக்குறிச்சி – தே.மலையரசன்

சேலம் – டி. எம். செல்வகணபதி

ஈரோடு – கே.இ.பிரகாஷ்

கோவை – கணபதி பி.ராஜ்குமார்

பொள்ளாச்சி – கே.ஈஸ்வரசாமி

பெரம்பலூர் – அருண் நேரு

தஞ்சாவூர் – முரசொலி

தேனி – தங்க தமிழ்ச்செல்வன்

தென்காசி (தனி) – Dr ராணி

11 புதியவர்களுக்கு வாய்ப்பு

திமுக வேட்பாளர் பட்டியலில் 11 பேர் புதியவர்கள். ⁠3 பேர் பெண்கள்.

அடிமட்ட தொண்டர்கள்/ ஒன்றியச் செயலாளர்கள் – 2 பேர், முனைவர்கள் – 2 பேர்.

மருத்துவர்கள் – 2 பேர், ⁠பட்டதாரிகள் – 19, வழக்கறிஞர்கள் – 6 பேர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

By location, type, and price to find the perfect bareboat sailing yacht or catamaran for your needs. Er min hest overvægtig ? tegn og tips til at vurdere din hests vægt. Here is a sneak peek at  tomorrow night’s masterchef junior on fox.