“வளர்ச்சித் திட்டங்களை முடக்கும் பாஜக-வை வீழ்த்த வேண்டும்!” – கோவில்பட்டி பிரசாரத்தில் கனிமொழி அறைகூவல்! – புகைப்பட தொகுப்பு

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி, கோவில்பட்டி மற்றும் அதன் அருகிலுள்ள பல்வேறு ஊர்களில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கோரி பிரசாரம் மேற்கொண்டார்.

கோவில்பட்டி நகரில் காமராஜர் சிலை மற்றும் வேலாயுதபுரம் கூட்டுறவு வங்கி அருகிலும் புதுக்கிராமம் பகுதியிலும், பசுவந்தனை சாலை – பாரதிநகர், கோவில்பட்டி பேருந்து நிலையம், மற்றும் ஏ.வி.பள்ளி அருகிலும் அவர் பொதுமக்களிடையே உரையாற்றி, வாக்கு சேகரித்தார். மேலும், கோவில்பட்டி – பங்களா தெரு மற்றும் ஜோதி நகர் பகுதி, தெற்கு திட்டங்குளம், விஜயாபுரி மற்றும் கரிசல்குளம் ஆகிய பகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தின்போது பேசிய அவர், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் போன்ற எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்களை முடக்கி, நம்மை வஞ்சித்து வரும் பாஜக-வை வீழ்த்த வேண்டும் என்றும், நம் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கும் பாசிச பாஜகவுக்கும் அடிமை அதிமுகவுக்கும் தகுந்த பாடம் புகட்டிட வேண்டும் என்றும் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

மேலும், இந்தியாவின் ஜனநாயகம் காத்திட பாசிச பாஜக வீழ்த்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், “நாட்டின் வளர்ச்சிக்கு ஒன்றியத்தில் ‘இந்தியா’ கூட்டணியின் ஆட்சி மலர வேண்டும். தமிழ்ப் பண்பாட்டை அழித்திடத் துடிப்பவர்களிடமிருந்து நம் நாட்டைக் காப்பதற்கான தேர்தல் இது. பாசிச சக்திகளை விரட்டிட உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.

கனிமொழியின் தேர்தல் பிரசார புகைப்பட தொகுப்பு கீழே…

பசுவந்தனை சாலை

கோவில்பட்டி காமராஜர் சிலை

கோவில்பட்டி – பங்களா தெரு

விஜயாபுரி மற்றும் கரிசல்குளம்

கனிமொழி பிரசாரம் மேற்கொண்ட பகுதிகளில், மக்கள் திரளாக கூடி அவரது பேச்சை கைதட்டி ரசித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This contact form is created using. Özel yat kiralama. 000 dkk pr.