தமிழ்நாட்டில் கோடைவெயில் கொளுத்தியெடுத்து வருகிறது. கடந்த சில மாதங்களாகவே மழை இல்லாத காரணத்தால் வெப்பம் தாங்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களில், குறிப்பாக தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. ஆனாலும், பரவலாக பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படுவதால், மக்களிடையே மழை குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது.
இந்த நிலையில், கேரளாவில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கக்கூடும் என ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது.
இந்த ஆண்டு பருவமழை
இந்த சூழ்நிலையில் தான், பணவீக்கத்திற்கு எதிரான அரசாங்கத்தின் போராட்டத்திற்கு நிவாரணம் அளிக்கக்கூடிய வகையில், இந்திய வானிலை ஆய்வு மையம், இந்த ஆண்டில் பருவமழை, வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்றும், இது நீண்ட கால சராசரியில் (LPA) 106 சதவீதமாக இருக்கலாம் என்றும் கணித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான இந்திய பருவமழை குறித்து பெரும்பாலான வானிலை வல்லுநர்கள் ஏற்கெனவே வெளியிட்டிருந்த ஒருமித்த கருத்தையே இது பிரதிபலிக்கிறது. கடந்த வாரம், ‘ஸ்கைமெ’ட் என்ற தனியார் வானிலை முன்னறிவிப்பு நிறுவனம், “இந்த ஆண்டு ஒட்டுமொத்த இந்திய தென்மேற்கு பருவமழை 102 சதவீதமாக இருக்கும்” என்று கூறி இருந்தது. அதாவது ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் வழக்கமான சராசரி மழையின் அளவு 87 செ.மீ என்ற அளவாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இது இயல்பை விட கூடுதலாக 106 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்த சூழ்நிலையில் தான், பணவீக்கத்திற்கு எதிரான அரசாங்கத்தின் போராட்டத்திற்கு நிவாரணம் அளிக்கக்கூடிய வகையில், இந்திய வானிலை ஆய்வு மையம், இந்த ஆண்டில் பருவமழை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்றும், இது நீண்ட கால சராசரியில் (LPA) 106 சதவீதமாக இருக்கலாம் என்றும் கணித்துள்ளது.
எல் நினோ – ‘லா நினா’
2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய வானிலை ஆய்வு மையம், ‘இயல்புக்கு மேல்’ மழை பெய்யும் என்று கணிப்பது இதுவே முதல் முறை ஆகும்.
ஜூன் மாதத்தில் பருவமழை தொடங்கும் நேரத்தில் நடுநிலையாக மாறும் என்று எதிர்பார்க்கப்படும் எல் நினோ (El Nino), பின்னர் படிப்படியாக ‘லா நினா’ ( La Nina)வை நோக்கி நகரும்.
ஆண்டுதோறும் இந்தியாவில் எல் நினோ நிகழ்வால் பெரும்பாலும் பருவழை பெறப்படுகிறது. அதுவே, லா நினா நிகழ்வால் மழை பொழியும் போது அது வழக்கத்தை விட அதிக மழையை கொடுக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு லா நினா நிகழ்வினால் பருவமழை பொழிய இருப்பதால் இந்த ஆண்டிற்கான மழையின் சராசரி அளவு வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
2023 ஆம் ஆண்டில், எல் நினோவின் தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை ‘இயல்புக்குக் குறைவாக’ இருந்தது. இது அதற்கு முந்தைய நான்கு ஆண்டுகளில் முதல் முறையாகும்.
வடமேற்கு (ஜம்மு & காஷ்மீர் மற்றும் உத்தரகண்ட் மலைகள்), கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளைத் தவிர நாட்டின் நிலப்பரப்பில் 75-80 சதவீதம் இந்த ஆண்டு இயல்பான பருவமழையைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அசாம், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கலாம் என்றும் அம்மையம் மேலும் தெரிவித்துள்ளது.