திமுக ஆட்சியில் விக்கிரவாண்டி தொகுதியில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்கள் என்ன? – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம்!

டைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியிலும், அத்தொகுதி அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்திலும் கடந்த மூன்றாண்டு கால திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்கள் என்னென்ன, எத்தனை பேர் பயனடைந்துள்ளனர் என்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கி உள்ளார்.

“முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 63 ஆயிரத்து 168 மாணவர்களும், விக்கிரவாண்டியில் 10,651 மாணவர்களும் சூடான, சுவையான சிற்றுண்டி உட்கொண்டு கல்வியைத் தொடர்கின்றனர். முதல்வரின் முகவரி திட்டத்தில் 1 இலட்சத்து 27 ஆயிரத்து 223 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 1 இலட்சத்து 24 ஆயிரத்து 356 மனுக்களுக்கும், விக்கிரவாண்டியில் 21,093 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு பொதுமக்கள் பயன் பெற்றுள்ளனர்.

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் 1 இலட்சத்து 29 ஆயிரத்து 29 மாணவ, மாணவியர்கள் சேர்க்கப்பட்டு, 7 ஆயிரத்து 750 பெண் தன்னார்வலர்கள் மூலம் பயன் பெறுகின்றனர். விக்கிரவாண்டியில் 328 மாணவ மாணவியர் 83 தன்னார்வலர்கள் மூலம் பயனடைகின்றனர். மகளிருக்குக் கட்டணமில்லா விடியல் பேருந்து பயணத் திட்டத்தில் 6 கோடியே, 92 இலட்சத்து 89 ஆயிரத்து 206 முறையும், விக்கிரவாண்டியில் 3 கோடியே 89 இலட்சத்து 96 ஆயிரத்து 648 முறையும் மகளிர் / திருநங்கைகள் / மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்துள்ளனர்.

நான் முதல்வன் திட்டத்தில் 39,186 இளைஞர்கள் பயன்

நான் முதல்வன் திட்டத்தில் 39,186 இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 3 இலட்சத்து 49 ஆயிரத்து 257 குடும்பத் தலைவிகளும், விக்கிரவாண்டியில் 53 ஆயிரத்து 375 குடும்பத் தலைவிகளும் மாதம் 1,000 ரூபாய் பெற்று மகிழ்கின்றனர். 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடித் திட்டத்தில் 90.13 கோடி ரூபாய் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 20,799 குடும்பங்களும், விக்கிரவாண்டியில் ரூ.8.50 கோடி ரூபாய் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு 1,633 குடும்பங்களும் பயனடைந்துள்ளன.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 5 இலட்சத்து 34 ஆயிரத்து 136 பேரும், விக்கிரவாண்டியில் 80 ஆயிரத்து 929 பேரும் பயன் பெற்றுள்ளனர் இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் 2 ஆயிரத்து 995 பேருக்கு 1 கோடியே 83 இலட்சத்து 63 ஆயிரத்து 173 ரூபாய் மதிப்பில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் விக்கிரவாண்டியில் 11 இலட்சம் 55 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்பில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.

6,119 விவசாயிகளின் பம்ப் செட்களுக்கும், விக்கிரவாண்டியில் 16 கோடியே 76 இலட்சம் ரூபாய்ச் செலவில் 901 விவசாயிகளின் பம்ப்செட்களுக்கும் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தில் 78 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 16 நோய்களுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, 61 ஆயிரத்து 283 பேர் பயனடைந்துள்ளனர். விக்கிரவாண்டியில் 6 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 4 ஆயிரத்து 621 பேர் பயனடைந்துள்ளனர்.

சுய உதவிக்குழு கடன்கள் ரத்து

மாவட்டத்தில் 1,624 மகளிர் சுயஉதவிக் குழுக்களில், 16 ஆயிரத்து 128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன்கள் ரத்து. பல்வேறு முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 1 இலட்சத்து 43 ஆயிரத்து 33 பயனாளிகளுக்கு 314 கோடியே 67 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாயும்,. விக்கிரவாண்டி தொகுதியில் 15 ஆயிரத்து 415 பயனாளிகளுக்கு 6 கோடியே 28 இலட்சத்து 9 ஆயிரத்து 42 ரூபாயும் உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 24 ஆயிரத்து 158 மாற்றுத் திறனாளிகளுக்கு 5 கோடியே 55 இலட்சத்து 60 ஆயிரத்து 64 ரூபாயும், விக்கிரவாண்டியில் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 3 ஆயிரத்து 785 மாற்றுத் திறனாளிகளுக்கு 1 கோடியே 38 இலட்சத்து 8 ஆயிரத்து 700 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

திருமண நிதியுதவித் திட்டங்கள்

சமூக நலத்துறையின் சார்பில், பல்வேறு திருமண நிதியுதவித் திட்டங்களின்கீழ் 10ஆம் வகுப்பு படித்த 1,696 ஏழைப்பெண்களுக்குத் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம், ரூ.4.24 கோடி திருமண நிதியுதவியும், ரூ.6.10 கோடி மதிப்பிலான 13.568 கிலோ கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளது.

பட்டம் மற்றும் பட்டயம் படித்த 2,085 ஏழைப் பெண்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.10.42 கோடி திருமண நிதியுதவியும், ரூ.7.50 கோடி மதிப்பிலான 16.680 கிலோ கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து, கல்லூரிகளில் சேர்ந்த 9 ஆயிரத்து 488 மாணவிகளும், விக்கிரவாண்டியில் 738 மாணவிகளும் மாதம் 1,000 ரூபாய் பெற்று வருகின்றனர்.


மாணவ, மாணவியர்களுக்கான திட்டங்கள்

விக்கிரவாண்டி தொகுதியில் பள்ளிக் கல்வித் துறைமூலம் 19,589 மாணவ, மாணவியர்க்கு விலையில்லா சீருடைகள், 10,627 மாணவ, மாணவியர்க்கு விலையில்லா காலணிகள், 31,295 மாணவ, மாணவியர்க்கு விலையில்லா புத்தகப் பைகள், 5,842 மாணவ, மாணவியர்க்கு விலையில்லா அட்லஸ்கள், 3,610 மாணவியர்க்கு விலையில்லா கிரையான்கள், 5,963 மாணவ, மாணவியர்க்கு விலையில்லா கணித உபகரணப்பெட்டிகளும், 7,017 மாணவ, மாணவியர்க்கு விலையில்லா வண்ண பென்சில்கள், 15,140 மாணவ, மாணவியர்க்கு, விலையில்லா பூட்ஸ்கள், 15,140 மாணவ, மாணவியர்க்கு விலையில்லா காலுறைகள் (2Socks) வழங்கப்பட்டு பயன் அடைந்துள்ளனர்.


விழுப்புரம் மாவட்டத்தில், 1 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 7,600 குடும்பங்களுக்கும் விக்கிரவாண்டி தொகுதியில் 20 இலட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 1,354 வேளாண் குடும்பங்களுக்கும் வேளாண் உபகரணத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது” என முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Platform is evident in this move, empowering developers to select the ai models that best suit their specific needs. Big brother all stars recap for 9/9/2020 : who won pov ?. Sunworld 8 gulet – simay yacht charters – private yacht charter turkey & greece.