கோவை, ஈரோடுக்கு முதலமைச்சர் அறிவித்த 22 புதிய திட்டங்கள்!

பொள்ளாச்சி, ஆச்சிப்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்து கொண்டு 1,237.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோயம்புத்தூர், ஈரோடு திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அத்துடன், 57,325 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோயம்புத்தூர், ஈரோடு திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், கோவைக்காக முதலமைச்சர் அறிவித்த 13 புதிய திட்டங்கள் வருமாறு:

தென்னை வேர் வாடல் நோய் பாதிப்பு அதிகம் உள்ள மரங்களைவெட்டி அகற்றுவதற்காக ரூ.14 கோடியே 4 லட்சம் நிதி வழங்கப்படும். 3 லட்சம் தென்னங்கன்றுகள், ரூ.2 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். அகில இந்திய அளவில் 157 ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள் மூலமாக பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்யவும் வங்கி கணக்கில் அப்பணத்தை வரவு வைக்கவும் நடவடிக்கை.

கூட்டுறவு சங்கம் மூலம் தேங்காய் நேரடியாக கொள்முதல் செய்து நுகர்வோருக்கு விற்பனை. விலாமரத்தூர் சாலை முதல் அத்திக்கடவு அணை வரை 8.29 கி.மீ நீளத்தில், ரூ.9 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கப்படும். வார்டு எண் 11 மூங்கில் மடை குட்டை பழங்குடியினர்வசிக்கும் பகுதியில் ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் மற்றும் வடிகால் அமைக்கப்படும். மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், மாவுத்தம்தி ஊராட்சிக்குட்பட்ட வாளையார் வனப்பகுதியில் தரை மட்ட குடிநீர் தொட்டி கட்டித் தரப்படும்.

காரமடை, ஆனைமலை, சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் சாலை சீரமைக்கப்படும். இக்கரை பூளுவாம்பட்டி ஊராட்சி, பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், சோமையம்பாளையம் ஊராட்சி, மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் திவான்சாபுதூர் ஊராட்சி மற்றும் மாவுத்தம்தி ஆகிய ஊராட்சிகளில் நான்கு பாலங்கள் கட்டப்படும். 15 அங்கன் வாடி மையங்கள், 18 நியாயவிலைக் கடைகள், 14 சமுதாய நலக் கூடங்கள், 7 பேரூராட்சிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படும்.

கோயம்புத்தூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மழைநீர் வடிகால் மற்றும் கான்கீரிட் சாலை ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். உக்கடம் பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தினால் அகற்றப்பட்ட பேருந்து நிலையத்தினை ரூ.20 கோடி மதிப்பீட்டில் நவீன முறையில் மறுசீரமைக்கப்படும்.

ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலை பள்ளி வளாகத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஹாக்கி விளையாட்டு தரை அமைக்கப்படும் ஆகிய 13 புதிய திட்டங்களை அவர் அறிவித்தார்.

ஈரோட்டிற்கு 9 புதிய திட்டங்கள்

சோலார் பகுதியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில், காய்கறி மளிகை சந்தைவளாகம் அமைக்கப்படும். வ.உ.சி பூங்கா, ரூ.15 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.

ரோடு மாநகராட்சி பகுதியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன், காவேரி ஆற்று முகப்பினை மேம்படுத்தப்படும்.புதிய மாவட்ட மைய நூலகம் ஒன்று ரூ.6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

ரோடு மாவட்ட அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் பர்கூர் ஊராட்சி, தாளவாடி ஊராட்சி ஒன்றியம் தலமலைஆசனூர் ஊராட்சிகளில் இணைப்புச் சாலை வசதிஇல்லாத மலைவாழ் மக்கள் வசிக்கும் 9 குக்கிராமங்களுக்கு ரூ.5 கோடி மதிப்பீட்டில் இணைப்புச் சாலை வசதி ஏற்படுத்தப்படும். 8 சமுதாய நலக்கூடங்கள் கட்டப்படும். சத்தியமங்கலம் நகராட்சியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் குடிநீர் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஞ்சள் , மஞ்சள் மதிப்புக்கூட்டு பொருட்களை இருப்பு வைத்து விற்பனை செய்ய சுமார் 5000 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட குளிர்பதன் கிடங்கு வைக்க அமைக்கப்படும். பெருந்துறையில் நொய்யல் ஆற்றின் வடக்குக்கரையில் உள்ள கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்திட ரூ.10 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் ஆகிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advantages of overseas domestic helper. 陳元溢師傅多年來以卓越的服務能力和廣泛的專業知識為不同人士提供服務,並贏得了廣泛的 客戶讚許 和認可。. You can easily find the psychological oasis on backlinks in popular platforms such as.