நீட் ஒழிப்பு, பாஜக ஆட்சியை வீழ்த்திட சூளுரை… திமுக இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சேலத்தில் திமுக இளைஞரணி மாநில இளைஞரணி மாநாடு இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் நீட் ஒழிப்பு, தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்துப் போராட்டம், பாஜக ஆட்சியை வீழ்த்திட சூளுரை…என மாநாட்டின் முக்கிய அம்சமாக 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது.காலை சுமார் 9.15 மணியளவில், மாநாட்டின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி. இந்நிகழ்ச்சியில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டிற்காக மிகப் பிரம்மாண்டமான திடல் அமைக்கப்பட்டுள்ளது. திடலின் முகப்பில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கம்பீர முகங்கள் பொறித்த மலை போன்ற வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று நாள் முழுவதும் நடைபெறும் இந்த மாநாட்டில், அமைச்சர்கள், சொற்பொழிவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசும் கருத்தரங்கம் நடைபெறுகிறது. மாலை உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் ஸ்டாலின் மாநாட்டில் பேசுகிறார்.

இந்த நிலையில், மாநாட்டின் முக்கிய அம்சமாக நீட் ஒழிப்பு, தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்துப் போராட்டம், பாஜக ஆட்சியை வீழ்த்திட சூளுரை…என 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் முழு விவரம்:

  1. இளைஞர் அணியின் மாநில மாநாட்டிற்கு அனுமதியளித்த ஜனநாயகப் பாதுகாவலர் கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றி!
  2. தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்க அயராது பாடுபடும் முதலமைச்சருக்கு இளைஞர் அணி என்றும் துணை நிற்கும்!
  3. மகளிர் வாழ்வில் தன்னம்பிக்கையை வளர்க்கும் விடியல் பயணம்!
  4. குடும்பத் தலைவியரின் உழைப்பை மதிக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்!
  5. மாணவர்களின் உடல் நலன் காத்து ஊக்கமளிக்கும் காலை உணவுத் திட்டம்!
  6. நாளைய தலைமுறையை வளர்த்தெடுக்கும் நான் முதல்வன் – புதுமைப் பெண் திட்டங்கள்!
  7. மக்களின் உயிர்காக்கும் மருத்துவத் திட்டங்கள்!
  8. நிதி நெருக்கடியிலும் மகிழ்ச்சிப் பொங்க வைத்த பொங்கல் பரிசுத் தொகுப்பு!
  9. வரலாறு காணாத மழையிலும் மக்களைக் காத்த முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி!
  10. நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞரின் இலட்சிய வழி நடப்போம்!
  11. தமிழ்நாட்டை முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக்கிய முதலமைச்சர்!
  12. இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாட்டை மாற்றிவரும் மாண்புமிகு அமைச்சர் அயராத முயற்சிகளை இம்மாநாடு பாராட்டுகிறது.
  13. உயிர்பலி நீட் நுழைவுத் தேர்வை ஒழிக்கும் வரை போராட்டம் ஓயாது!
  14. குலக்கல்வி முறையைப் புகுத்தும் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்துப் போராட்டம்
  15. மாநிலப் பட்டியலுக்குக் கல்வி-மருத்துவத்தை மாற்றுக!
  16. முதலமைச்சரே பல்கலைக்கழக வேந்தர்
  17. ஆளுநர் பதவியை நிரந்தரமாக அகற்றிடுக!
  18. தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு வேலைகளில் தமிழர்களை நியமித்திடு
  19. மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம்
  20. கலைஞரின் மாநில சுயாட்சித் தீர்மானத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கிடுக!
  21. அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளைக் கைப்பாவையாக்கிய ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்!
  22. நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் சர்வாதிகாரத்தை ஒழித்திடுவோம்!
  23. இந்துக்களின் உண்மையான எதிரி பா.ஜ.க.தான் என்பதை அம்பலப்படுத்துவோம்.
  24. பா.ஜ.க ஆட்சியை வீழ்த்திடும் முன்கள வீரர்களாக இளைஞர் அணி செயல்படும்!
  25. நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான சூளுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Microsoft announces mandatory multi factor authentication (mfa/2fa) for more secure azure sign ins. Dancing with the stars queen night recap for 11/1/2021. Ugur gulet – private gulet charter marmaris& gocek.