அச்சுறுத்தும் காற்று மாசுபாடு… அணை போட்டுத் தடுக்கும் முதலமைச்சர்!

ன்றைய தேதிக்கு உலகை மிகவும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு முக்கிய பிரச்னை எதுவென்றால், அது புவி வெப்பமயமாதல் அதிகரிப்பும், அதனால் ஏற்படும் பருவநிலை மாற்றமும் தான். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ள போதிலும், காற்று மாசுபாடும் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அந்த வகையில் ‘காற்று மாசுபாடு’, புவி வெப்பமயமாதல் அதிகரிப்புக்கு துணை போவது மட்டுமல்லாமல், இந்தியர்களை அதிகம் கொல்லும் பெரிய காரணிகளில் ஐந்தாவதாகவும் திகழ்வதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பாதிப்புகள் என்னென்ன?

இருதய பிரச்னை, நுரையீரல் தொற்றுகள், மூளை பாதிப்பு, சிறுநீரகங்கள் பாதிப்பு, சர்க்கரை நோய், பேறுகால பாதிப்புகள்-குறைப்பிரசவம், குழந்தையின் எடை குறைதல், கருக்கலைப்பு, குழந்தை இறந்து பிறத்தல் போன்றவை இந்த காற்று மாசுபாட்டினால் நிகழும் என ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளன.

இவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது காற்று மாசுபாடு என்பது பொதுச்சுகாதாரத்தில் ஏற்பட்டுள்ள ஒரு அவசரநிலை என்றே கூறலாம். இந்த பூமி பந்தையே அச்சுறுத்தலின் விளிம்பில் நிறுத்தியுள்ள பருவநிலை மாற்றம் (climate change),மாசுபாடு ( pollution) மற்றும் உயிரிப்பன்மய அழிவு ( biodiversity loss) ஆகிய அனைத்துக்கும் காற்று மாசுபாடே காரணமாகும். பெருகும் வாகனங்களின் எண்ணிக்கை, தொழிற்சாலைகள், மக்கள் தொகை அதிகரிப்பால், ஆக்ஸிஜனின் நுகர்வு அதிகரித்து கார்பன் டை ஆக்சைட்டின் வெளியீடு அதிகரிப்பு போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

தேசியத் தூய காற்றுத் திட்டம்

இத்தகைய காரணங்களால் தான், சென்னை உட்பட இந்தியாவின் தலைநகரங்கள் பெரும்பாலும் காற்று மாசுபாட்டின் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதனை கருத்தில்கொண்டே, இந்திய அரசின் தேசியத் தூய காற்றுத் திட்டம் (National Clean Air Programme – NCAP), கடந்த 2019 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டின் காற்று மாசுபாட்டு அளவுக்குக் கீழாக, பிஎம் 10 மற்றும் பிஎம் 2.5 துகள்மங்கள் அடர்த்தியில் 20% முதல் 30% குறைப்பை 2024 ஆம் ஆண்டில் எட்ட வேண்டும் என்பது இத்திட்டத்தின் இலக்காகும்.

நிதி ஒதுக்கீட்டை அதிகரித்த முதலமைச்சர்

அந்த வகையில், காற்று மாசுபாட்டின் அச்சுறுத்தலையும் அதன் தீங்கையும் நன்கு உணர்ந்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்களின் நலனை காப்பதற்காக காற்று மாசுபாட்டை உடனுக்குடன் கண்காணித்து அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளார். இதனால், காற்று மாசுபாட்டை அதிகரிக்கும் கருவிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநரைப் பொறுத்தவரை, காற்று மாசுபாட்டினை கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சியும், மாசுக்கட்டுப்பாடு வாரியமும் இணைந்து பல திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.

சென்னைக்கு மட்டும் ரூ. 367.51 கோடி செலவு

இது ஒருபுறம் இருக்க, இந்திய அரசின் தேசியத் தூய காற்றுத் திட்டத்தின் (National Clean Air Programme – NCAP) கீழ், காற்று மாசுபாட்டைக் குறைக்க அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. அப்படி ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக பயன்படுத்திய மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும் இடம்பெற்றுள்ளது. உதாரணமாக சொல்வதானால், NCAP திட்டத்தின் கீழ் சென்னை மாநகரத்துக்கு கடந்த ஐந்தாண்டு காலத்தில் 367 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அந்த நிதியில், 2023 டிசம்பர் 21 ஆம் தேதி வரை 367.51 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அதாவது, ஒதுக்கப்பட்ட நிதியையும் தாண்டி தமிழக அரசு கூடுதலாக செலவிட்டுள்ளது.

இது, காற்று மாசுபாட்டைக் குறைப்பதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எவ்வளவு ஆர்வத்துடனும் முனைப்புடனும் உள்ளார் என்பதையே காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advantages of overseas domestic helper. Agência nacional de transportes terrestres (antt) : aprenda tudo | listagem de Órgãos | bras. Das team ross & kühne.