‘நீரிழிவு ரெட்டினோபதி’யால் போகும் கண் பார்வை… ஏ.ஆர். ரஹ்மானின் அட்வைஸ்!

லகம் முழுவதும் சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயால் ஏற்படும் பாதிப்புகளால் ஏராளமானோர் பாதிப்படைகின்றனர். இந்தியாவில் 10 கோடிக்கு அதிகமானோரும் தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கு அதிகமானோரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, கடந்த ஆண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்தது.

இதில், தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கு அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நீரிழிவு தினமும் ஏ.ஆர். ரஹ்மான் எச்சரிக்கையும்

இந்த நிலையில், இன்று உலகம் முழுவதும் சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இன்று பதிவிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், “நீரிழிவு கடுமையான குருட்டுத்தன்மையை கூட ஏற்படுத்தும் என்பதால், பார்வையை பாதுகாக்க வருடாந்திர கண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்” தனது X தளத்தின் மூலம் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“நண்பர்களே, நீங்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கிறீர்கள் என்றால், வழக்கமான கண் பரிசோதனைகள் மூலம், நீரிழிவு ரெட்டினோபதியை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உங்கள் பார்வையைப் பாதுகாக்க உதவலாம். இன்று நவம்பர் 14 ஆம் தேதி உலக நீரிழிவு தினம் என்பதால் கண் பரிசோதனைக்கு நேரம் ஒதுக்குமாறு உங்களை ஊக்குவிக்கிறேன்.

உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், அல்லது யாரையாவது அறிந்திருந்தால், உங்கள் பார்வையைப் பாதுகாக்க நடவடிக்கையை எடுக்கவும். ஒரு எளிய, வருடாந்திர கண் பரிசோதனை அனைத்து வித்தியாசத்தையும் ஏற்படுத்தும். இந்தச் செய்தியைப் பரப்பி, ஒளிமயமான எதிர்காலத்தைக் காண அனைவருக்கும் உதவுவோம்.நன்றி” என பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த விழிப்புணர்வு பதிவு அனைவரது கவனத்தையும் பெற்று, பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது.

ரெட்டினோபதி என்ன செய்யும்?

இந்த நிலையில், ரஹ்மான் குறிப்பிட்ட நீரிழிவு ரெட்டினோபதி என்றால் என்ன, அது எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்து மருத்துவர்கள் சொல்லும் தகவல்கள் இங்கே…

“நீரிழிவு நோய் இருந்தால், ரெட்டினோபதி (கண்கள் பாதிப்பு), நெஃப்ரோபதி (சிறுநீரக பாதிப்பு), நியுரோபதி (நரம்புகள் பாதிப்பு) ஆகியவை ஏற்படும். சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இந்த பாதிப்புகள் ஏற்படாது. ஆனால், பக்கவாதம் ஏற்பட வாய்ப்புண்டு.கால்களில் ரத்தப் போக்கு நின்று செல்கள் இறந்து கால்களை வெட்டி எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இவை எல்லாம், நீரிழிவு நோய் என்ற நிலைக்குச் செல்வதற்கு முன்பாகவே ஏற்படலாம்,” என்கிறார் மருத்துவர் மோகன்.

அறிகுறிகள் என்ன?

மங்கலான பார்வை / பார்வை இழப்பு
மிதவைகள் அல்லது கரும்புள்ளிகளைப் பார்ப்பது
இரவில் பார்ப்பதில் சிரமம்
நிறங்களை வேறுபடுத்துவதில் சிரமம்

கண்பார்வை பறிபோகும்

“நீரிழிவு நோய் இருந்தால், ரெட்டினோபதி (கண்கள் பாதிப்பு), நெஃப்ரோபதி (சிறுநீரக பாதிப்பு), நியுரோபதி (நரம்புகள் பாதிப்பு) ஆகியவை ஏற்படும். சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இந்த பாதிப்புகள் ஏற்படாது. ஆனால், பக்கவாதம் ஏற்பட வாய்ப்புண்டு. கால்களில் ரத்தப் போக்கு நின்று செல்கள் இறந்து கால்களை வெட்டி எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இவை எல்லாம், நீரிழிவு நோய் என்ற நிலைக்குச் செல்வதற்கு முன்பாகவே ஏற்படலாம்” என்கிறார்கள் மருத்துவர்கள்.

“இதில், ரெட்டினோபதி பாதிப்பு என்பது, கண்களின் திரைக்குப் பின்னால் இருக்கும், சென்சிடிவ் திசுவான ரெட்டினாவை சேதப்படுத்தி கண் பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உண்டாக்குவது தான் நீரிழிவு ரெட்டினோபதி (Diabetic retinopathy).இவை, எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் கண்களை பாதிக்க கூடியது. கண் நரம்புக்குள் விழித்திரையின் நடுவில் பார்வையை அளிக்கும் இடத்தில் நீர் கோர்ப்பதால், கண்களில் ஆக்ஸிஜன் இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. இதனால், கெட்ட இரத்தம் அதிகரித்து ரத்தக்குழாய் வெடித்து கண்ணுக்குள் கசிவுகள் உண்டாகிறது. இது தீவிரமாகும் போது, குருட்டுத்தன்மை பிரச்னை நேரிடும்” என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

acting deputy ag visits chicago to ‘observe’ immigration crackdown. Raven revealed on the masked singer tv grapevine. dprd batam gelar paripurna bahas ranperda angkutan massal dan perubahan perda pendidikan.