விஜய்: எம்.ஜி.ஆருடன் ஒப்பிடுவது சரியா?

மிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழாவுக்குப் பிறகு, நடிகர் விஜய்யை மையப்படுத்தியே அரசியல் வட்டாரத்தில் விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளன. லேட்டஸ்டாக, எம்.ஜி.ஆரின் செல்வாக்குடன் விஜய்யின் வருகையை ஒப்பிட்டு அரசியல் கட்சிகள் பேசத் தொடங்கியுள்ளன.

தமிழ்நாடு அரசியலில் திரைத்துறையின் தாக்கம் என்பது எம்.ஜி.ஆரின் வருகைக்குப் பிறகு தீவிரமானது. 1972 ஆம் ஆண்டு அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆர், திமுக-வுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக அபாரமான வெற்றியைப் பெற்றது. புதிதாக ஆரம்பித்த ஒரு கட்சி இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றது இந்தியா முழுவதும் உள்ள கட்சிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதன்பிறகு இறக்கும் வரையில் அவரே தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி ஜானகி சில நாட்கள் முதலமைச்சராக இருந்தார். இதன்பிறகு அதிமுகவை ஒன்றுபடுத்தி, 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றார்.

விஜயகாந்துக்கு கிடைத்த தனி இடம்

இதற்கிடையில், எம்.ஜி.ஆரின் மீதான அபிமானத்தில் நடிகர் பாக்யராஜ் உள்பட சில நடிகர்கள் தனிக்கட்சியைத் துவங்கினர். அவை எதுவும் வெற்றி பெறவில்லை. இயக்குநர் டி.ராஜேந்தர், நடிகர் கார்த்திக் ஆகியோரின் கட்சிகளும் மக்கள் மனதில் இடம்பிடிக்கவில்லை. ஆனால், இவர்களுக்குப் பின்னர் அரசியலுக்கு வந்த விஜயகாந்துக்கு தனி இடம் கிடைத்தது. தனது வள்ளல் தன்மையால் மக்கள் மனதில் இடம்பிடித்தார். அதுவும் 2016 சட்டமன்றத் தேர்தலுடன் முடிவுக்கு வந்துவிட்டது.

திமுக, அதிமுக-வில் சலசலப்பு

அதே சமயம், திரைத்துறையிலிருந்து அரசியலுக்குள் யார் காலடி எடுத்து வைத்தாலும் அது திமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் சற்று சலசலப்பை ஏற்படுத்துவது வழக்கமாகவே இருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, நடிகர் விஜய் நடித்த ‘தலைவா’ படத்தின் போஸ்டரில், TIME TO LEAD என்ற வாசகம் இடம்பெற்றதை அதிமுக தலைமை ரசிக்கவில்லை. இதற்கு அப்போதே எதிர்ப்பு கிளம்பியதாக பேசப்பட்டது. மேலும் விஜய் படங்களுக்கு அரசியல் ரீதியாக சிக்கல்களும் ஏற்பட்டன.

தற்போது நடிகர் விஜய் தனிக்கட்சி தொடங்கியுள்ளது, பிரதான அரசியல் கட்சிகளை உற்று கவனிக்க வைத்துள்ளது. அவரது கட்சியின் கொள்கைப் பாடலில் எம்ஜிஆர் பெயர் இடம்பெற்றது விவாதத்தை ஏற்படுத்தியது.

ஆர்.எஸ். பாரதி

இதுகுறித்து, ஆகஸ்ட் 26 ஆம் தேதி நாகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தமிழகத்தில் யார் புதிதாக கட்சி ஆரம்பித்தாலும் பரவாயில்லை. அவர்கள் ஓரிரு அமாவாசைகள் மட்டுமே தாங்குவார்கள். அதற்கு மேல் அவர்கள் தாங்க மாட்டார்கள். கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல் தற்போது கட்சி ஆரம்பிப்பவர்கள் எல்லாம் நாளைக்கே கோட்டைக்கு சென்று கொடியை நட்டுவிடலாம் என மனக்கோட்டை கட்டுகிறார்கள்” என விமர்சித்தார்.

ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், “சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம் என்ற எண்ணம் தமிழக அரசியலில் நீண்டகாலம் இருந்து வருகிறது. எம்ஜிஆர் சினிமாவில் இருந்தபோதே அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டி வந்தார். அவரது வெற்றிக்கு அது ஒரு காரணம். திமுக-வில் அவருடன் சேர்ந்து விலகிய பலர், அவருடன் இருந்ததால் வெற்றி பெற முடிந்தது. அதன்பிறகு வந்தவர்கள் பிரகாசிக்க முடியவில்லை. பொதுவாக வைக்கப்படும் விமர்சனம், அதில் உள்நோக்கம் இருப்பதாக பார்க்க வேண்டியதில்லை. அரசியல் மிகவும் கடினமானது. அது போராட்டங்கள் நிறைந்த களம் என்பதை இந்த தலைமுறையில் நடிகர் விஜய் சந்திக்கும் வாய்ப்பு உருவாகும்” என்றார்.

நடிகர் விஜய் குறித்து எழும் விமர்சனங்கள் குறித்துப் பேசும் த.வெ.க நிர்வாகி ஒருவர், “எம்.ஜி.ஆருக்குப் பிறகு கட்சி தொடங்கியவர்கள் அரசியலில் வேரூன்றாமல் போனதற்கு பல காரணங்கள் உள்ளன. எம்.ஜி.ஆரின் கொடைத்தன்மை, பிரபலம், மக்களை அணுகும் முறை ஆகியவற்றால் பெரும் மக்கள் கூட்டத்தை தன் பக்கம் அவரால் வைத்துக் கொள்ள முடிந்தது. அது விஜயகாந்துக்கும் பொருந்தும்.

அதேபோல், நடிகர் விஜய்யும் மக்கள் செல்வாக்குமிக்கவராக இருக்கிறார். திரையுலகில் சம்பாதித்ததை மக்களுக்காக செலவு செய்கிறார். அவரது வருகையின் மூலம் அரசியலில் ஆரோக்கியமான போட்டியே இருக்கும். முதல் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு முன்னரே இவ்வளவு விமர்சனங்களை முன்வைக்க வேண்டிய அவசியம் இல்லை. த.வெ.க-வின் முதல் மாநாடு நடக்கும் போது கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை மக்கள் உணர்ந்து கொள்வார்கள்” என்கிறார்.

காலம் காத்திருக்கிறது, மக்களும் காத்திருக்கிறார்கள்… விஜய் வெல்வாரா இல்லை பத்தோடு பதினொன்றா என 2026 ல் தெரிந்துவிடும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

有氧so young > 揮灑汗水,提高代謝量. Lizzo extends first look deal with prime video tv grapevine. 성공적인 온라인 강의를 위해 가장 중요한 첫 단계는 적절한 주제를 선정하는 것입니다.