பொங்கலில் ‘ஜனநாயகன்’… பொதுக்குழுவில் தேர்தல் உத்தி… வேகமெடுக்கும் விஜய்!

மிழக வெற்றிக் கழக தலைவரன நடிகர் விஜய், தனது அரசியல் பயணத்தில் முக்கியமான திருப்புமுனையை நோக்கி அடியெடுத்து வைக்கத் தொடங்கி உள்ளார்.

அவரது கடைசி படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்,’ 2026 பொங்கலுக்கு வெளியாக உள்ளது.இது, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் வருவதால், அவரது அரசியல் பிரச்சாரத்திற்கு மறைமுக உதவியாக அமையலாம். இதனிடையே, தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெற உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பிரச்சார திட்டத்தை விஜய் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், தமிழக அரசியல் களத்தில் அடுத்தகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜனநாயகன்’ – அரசியலுக்கு ஒரு பாலம்

எச். வினோத் இயக்கத்தில், விஜய் உடன் பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஜனநாயகன்’ ஒரு அரசியல் த்ரில்லர் என்று கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையை மையமாகக் கொண்டு வெளியாகும் இப்படம், விஜய்யின் அரசியல் பயணத்திற்கு ஒரு முன்னோட்டமாக அமையலாம் எனக் கருதப்படுகிறது. இப்படம், ‘ஜனநாயகன்’ படத்தின் கதை, தவெக-வின் கொள்கைகளான சமூக நீதி, சமத்துவம், மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றை பிரதிபலிக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. அப்படி இருந்தால், அது விஜய்யின் ரசிகர்களை மட்டுமல்ல, பொதுமக்களையும் உணர்வு ரீதியாக இணைக்கும் முயற்சியாகவும், விஜய்யின் சினிமா புகழை அரசியலில் கொண்டு சென்று இணைக்கும் ஒரு பாலமாக இருக்கும்.

தேர்தல் உத்தியைத் தீர்மானிக்கும் பொதுக்குழு

தவெக-வின் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28 அன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இதில், 2026 தேர்தலுக்கான தேர்தல் உத்தி, கூட்டணி வாய்ப்புகள், மற்றும் பிரச்சார திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. தவெக உள்வட்டார தகவல்களின்படி, ராமநாதபுரம் தொகுதியிலிருந்து அவர் நேரடியாக போட்டியிடலாம் என்று கருதப்படுகிறது, இது மீனவ சமூகத்தின் ஆதரவை பெறுவதற்கான ஒரு தந்திரமாக இருக்கலாம். தேர்தல் நிபுணர் பிரஷாந்த் கிஷோர், தவெக-வின் சிறப்பு ஆலோசகராக பணியாற்றுவதால், தரவுகள் சார்ந்த பிரச்சார உத்தி வகுக்கப்படலாம்.

மேலும், தவெக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிர்வாகிகளுக்கு, அவர்களது தொகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்னைகளை பட்டியலிடவும், அவற்றை ஆதாரங்களுடன் சேகரித்து சமர்ப்பிக்கவும் விஜய் உத்தரவிட்டுள்ளார். “மக்களின் பிரச்னைகள் மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை ஆவணப்படுத்துங்கள்; போராட்டங்கள் மற்றும் மக்களின் கோரிக்கைகளை அறிக்கையாக தயார் செய்யுங்கள்” என்று விஜய் அறிவுறுத்தியுள்ளார். இந்த தகவல்கள், 2026 தேர்தல் பிரச்சாரத்தில் தவெக-வின் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தப்படலாம் என்று கருதப்படுகிறது. குறிப்பாக கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கும் இது பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

மக்களை நோக்கி பயணம்

‘ஜனநாயகன்’ படப்பிடிப்பை முடித்தவுடன், விஜய் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் இறங்க திட்டமிட்டுள்ளார். பூத் கமிட்டி மாநாடு, மண்டல அளவிலான பொதுக்கூட்டங்கள், மற்றும் கிராமப்புறங்களில் நேரடி சந்திப்புகள் ஆகியவை இதில் அடங்கும். தவெக உள்வட்ட தகவல்களின்படி, “மக்களுக்கு நெருக்கமான தலைவர்” என்ற பிம்பத்தை உருவாக்குவதே விஜய்யின் முதல் இலக்கு என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், விஜய்யின் பயணத்தின் போது, இளைஞர்கள் மற்றும் பெண்களை கவரும் வகையில், கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் மகளிர் முன்னேற்ற திட்டங்கள் அறிவிக்கப்படலாம். விஜய்யின் ரசிகர் அமைப்பான ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ ஏற்கனவே 2021 உள்ளாட்சி தேர்தலில் 169 இடங்களில் போட்டியிட்டு 115 இடங்களை வென்றுள்ளது, இது அவருக்கு ஓரளவு அரசியல் அடித்தளத்தை அளித்துள்ளது.

எதிர்கால சவால்களும் வாய்ப்புகளும்

ஆனால், தமிழக அரசியலில் நீண்டகால அனுபவமுள்ள திமுக-வையும், அதிமுக-வையும் எதிர்கொள்ள, விஜய்யின் பிரபலம் மட்டும் போதுமானதாக இருக்குமா என்பது கேள்விக்குறி தான். தவெக உள்வட்டார தகவல்களின்படி, சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சு நடக்கிறது, ஆனால் “விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர்” என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர்.

கட்சியின் உறுப்பினர் சேர்க்கையில் 75 லட்சம் புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளனர், 2 கோடி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், நாகப்பட்டினம் போன்ற கடலோர மாவட்டங்களில் மீனவர் பிரச்னைகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. திமுக-வின் “குடும்ப ஆட்சி” மற்றும் பாஜக-வின் “பிரிவினை அரசியல்” ஆகியவற்றை எதிர்த்து, “மக்கள் ஆட்சி” என்ற முழக்கத்தை தவெக முன்னெடுக்கும் என அக்கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

2026 தேர்தலில் தவெக ஒரு புதிய சக்தியாக உருவாகலாம். ஆனால், திராவிட கட்சிகளின் ஆழமான வேர்களை எதிர்கொள்ள அவருக்கு தெளிவான திட்டமும், மக்கள் ஆதரவும் தேவை. விஜய்யின் மேற்கூறிய ‘மூவ்’, தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

有氧so young > 揮灑汗水,提高代謝量. Alex rodriguez, jennifer lopez confirm split. 升机?.