THE GOAT: பட ரிலீஸுக்கு முன்னரே இலாபம் பார்த்த விஜய்யின் ‘ தி கோட்’ … அபார தொகைக்கு விற்பனை!

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள , ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (தி கோட்) திரைப்படம், வருகிற 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். ‘தி கோட்’ படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் ‘தி கோட்’ படத்தின் டிரைலர் மற்றும் 4 பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. இதில் டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகள் பெரியளவில் கவனத்தை ஈர்த்தன.
நாளை மறுதினம் இப்படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிக்கெட் முன்பதிவு திரையரங்குகளில் தொடங்கியதையடுத்து ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்துவருகின்றனர்.
இப்படம் தமிழ்நாடு மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மும்பை உட்பட வட இந்தியாவின் சில நகரங்களிலும் வெளியாக உள்ளது. அதேபோல் ஓவர்சீஸ் ரைட்ஸ் மூலம் பல்வேறு உலக நாடுகளிலும் வெளியாகிறது.
இந்த நிலையில், இந்த படத்துக்கான பிரி ரிலீஸ் விற்பனை மொத்தம் ரூ. 422 கோடி அளவுக்கு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த விவரம் வருமாறு:
தமிழக, கேரளா உரிமை – ரூ. 95 கோடி
கர்நாடகா உரிமை – ரூ. 9 கோடி
ஆந்திரா/தெலங்கானா உரிமை – ரூ. 30 கோடி
வட இந்திய உரிமை – ரூ. 15 கோடி
ஓவர்சீஸ் ( வெளிநாடு ) உரிமை – ரூ. 53 கோடி
தியேட்டர்கள் மூலமான மொத்த விற்பனை – ரூ. 202 கோடி
ஓடிடி உரிமை – ரூ. 105 கோடி
ஆடியோ உரிமை – ரூ. 25 கோடி
சாட்டிலைட் ( தொலைக்காட்சி) உரிமை – ரூ. 90 கோடி
தியேட்டர் அல்லாத விற்பனை மொத்தம் – ரூ. 220 கோடி
பட ரிலீஸுக்கு முந்தைய மொத்த விற்பனை தொகை – ரூ. 422 கோடி
படத்துக்கான பட்ஜெட் – ரூ. 350 கோடி
தயாரிப்பாளர் இலாபம் – ரூ. 72 கோடி