இளைஞர்களின் எதிர்காலத்தை செதுக்கும் திமுக அரசு!

‘திராவிட மாடல்’ அரசின் தாக்கம் என்ன என்பதையும், அது தமிழ்நாட்டை எந்த அளவுக்கு வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டு செல்கிறது என்பதையும் பல வட மாநிலங்கள் ஏக்கத்துடன் பார்ப்பதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். அதன் இன்னொரு அம்சம்தான், இளைய தலைமுறையினரின் வருங்காலத்தை ஆக்கபூர்வமாக செதுக்கும் வகையில் திமுக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள்!

திமுகவின் முக்கிய கொள்கைகளில் ஒன்று கல்வி வளர்ச்சி. அதனால்தான் தொடக்க கல்வி முதல் உயர்கல்வி வரையிலான திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளித்து செயல்படுகிறது. இதனால் திமுக ஆட்சியில் பள்ளி, கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கூடவே தமிழ்நாட்டின் தற்போதைய இளம் தலைமுறையினர் உலகை வெல்ல வேண்டும் என்னும் நோக்கில் கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சரின் கனவு திட்டமான, நான் முதல்வன் திட்டம்’ போன்ற பல புதுமையான திட்டங்களையும் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

‘நான் முதல்வன் திட்டம்’

‘நான் முதல்வன் திட்டம்’ என்பது போட்டித் தேர்வு பயிற்சித் திட்டமாகும். இது UPSC குடிமைப் பணித் தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு நிதி உதவி மற்றும் பயிற்சி அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இன்னும் சொல்வதானால், ‘நான் முதல்வன் திட்டம்’ தொடங்கப்பட்டதில் இருந்து UPSC குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

UPSC தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ரூபாய் 7,500

அந்த வகையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் போட்டி தேர்வு பிரிவின் கீழ், இந்திய குடிமைப் பணிகள் முதல் நிலை தேர்வுகளுக்கு தயாராகும் 1000 மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 7,500 வழங்கும் திட்டம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்திய குடிமை பணிகள் தேர்வுக்கு தயாராகும் ஒவ்வொரு மாணவருக்கும் ஊக்க தொகை வழங்கி, அவர்களின் தேர்வு பயிற்சிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் நான் முதல்வன் போட்டித் தேர்விற்கு 50,000 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், மெரிட் அடிப்படையில் ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூபாய் 7500 என 10 மாதம் இந்திய குடிமைப் பணிகள், இரயில்வே பணிகள், வங்கி பணிகள் உள்ளிட்ட தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்திய அரசின் தேர்வுகளில் கல்வியாக இருந்தாலும், வேலையாக இருந்தாலும் தமிழ்நாட்டு இளைஞர்கள், இளம்பெண்கள் இடம்பெற வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம்.

இளைஞர்களின் எதிர்காலத்தை செதுக்கும் திமுக அரசு

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி, உயர்கல்வியில் சிறந்த ஆசிரியர்களும் உட்கட்டமைப்பும் உள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டு மாணவர்கள் குடிமைப் பணித் தேர்வுகளில் தேர்வாவது குறைந்துள்ளது. குடிமைப் பணித் தேர்வுகளில் முன்னதாக 10% ஆக இருந்த தமிழ்நாட்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம், 2016-ஆம் ஆண்டுக்குப் பின்னர் 5% ஆக குறைந்துள்ளது. இது தொடர்ந்தால் ஒன்றியத்திலும், மாநில அரசு வேலைகளிலும் தமிழர்களே இல்லாத சூழல் உருவாகிவிடும். இதனைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் முதல்வன் திட்டத்தில் போட்டித் தேர்வுப் பிரிவு தொடங்கப்பட்டது.

ஓர் அரசு இயந்திரமாக செயல்படுவதை விட, தர்க்க ரீதியாக செயல்பட வேண்டும், அப்பொழுது தான் அந்நாட்டிற்கும் மாநிலத்திற்கும் வளர்ச்சி கிடைக்கும். ஓர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அந்த மாநிலத்திலேயே அரசின் உயர் பொறுப்புகளில் இருந்தால்தான் அம்மாநிலம் வளர்ச்சி பெறும். ஊக்கத் தொகையானது மாணவர்களின் பொருளாதார சுமையை குறைக்கும். எது குறித்தும் கவலையில்லாமல் மாணவர்கள் படிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

தொலைநோக்க்குப் பார்வையுடன், தமிழகத்திற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ள திமுக அரசு, இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்கள் வெற்றிபெறத் தேவையான வாய்ப்புகளை வழங்கி, அவர்களின் எதிர்காலத்தில் செலுத்துவதில் மிகுந்த அக்கறைக் கொண்டுள்ளது.

அந்த வகையில், திமுக அரசு தமிழக இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் கலங்கரை விளக்கமாகவே திகழ்கிறது என்று சொல்லலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advantages of local domestic helper. A aneel é a agência nacional de energia elétrica, responsável por regular e fiscalizar o setor elétrico brasileiro. Das team ross & kühne.