உதயநிதி துணை முதல்வர் ஆவது தடைபடுவது ஏன்? அறிவாலயத்தை அதிரவைக்கப் போகும் செப்டம்பர் 12

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அமெரிக்க பயணம் நிறைவடைவதற்கு 11 நாள்கள் உள்ள நிலையில், தமிழக அமைச்சரவை மாற்றம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்பது எப்போது என்பது குறித்த புது தகவல் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,

கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி இரவு, அமெரிக்கா செல்வதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அப்போது அவரிடம், ‘அமெரிக்க பயணம் முடிந்து தமிழ்நாடு திரும்பியதும் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா?’ என்றொரு கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த ஸ்டாலின், “மாற்றம் ஒன்றே மாறாதது; Wait and See” என்றார். இந்தப் பதில் அமைச்சரவையில் உள்ள சீனியர்களை ஆட்டம் காண வைத்தது. அதற்கு முன்னதாக, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், சீனியர் அமைச்சர்களை வைத்துக் கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் கஷ்டப்படுவதாக குறிப்பிட்டார்.

இந்தப் பேச்சுக்கு பதில் அளித்த துரைமுருகன், சிலர் நரை விழுந்த பிறகும் கூட இளைஞர்களுக்கு வழிவிடாமல் நடிப்பதாக சாடினார். ரஜினியின் பேச்சு சீனியர் அமைச்சர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அமைச்சரவை மாற்றம் எப்போது?

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினும் அமைச்சரவை மாற்றம் குறித்து சஸ்பென்ஸ் வைத்துப் பேசியது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. “அமைச்சரவையில் புதியவர்கள் சிலர் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர். துறைரீதியான மாற்றங்கள் பெரிய அளவில் இருக்கும். கூடுதல் பொறுப்புகளுடன் உதயநிதியும் துணை முதல்வராக நியமிக்கப்படுவார். அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு முதலமைச்சர், தமிழ்நாடு திரும்பும்போது அதற்கான பணிகள் வேகம் எடுக்கும்” என்கின்றனர், அறிவாலய வட்டாரத்தில்.

இதுகுறித்து திமுகவின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். “நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்னர், உதயநிதியை முதலமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதை உதயநிதியின் நீண்டகால நண்பரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தான் தொடங்கி வைத்தார். கடந்த ஜூன் மாதம் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அன்பில் மகேஷ், ‘விளையாட்டுத் துறை அமைச்சர், இளைஞர் நலத்துறை அமைச்சர் என பொறுப்பு வகித்தாலும் எங்களைப் போன்றவர்களுக்கு அவர் தான் துணை முதலமைச்சர்’ என உதயநிதியை குறிப்பிட்டார். அதே மேடையில் இருந்த முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு பதில் கூறவில்லை.

கட்சிக்குள் எதிர்ப்பு உள்ளதா?

கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி ராமநாதபுரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மேடையில் பேசும்போது, “19 ஆம் தேதிக்குப் பிறகு உதயநிதியை துணை முதல்வர் என அழைக்க வேண்டும்” என தேதியை குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “கோரிக்கை வலுத்துள்ளதே தவிர, பழுக்கவில்லை” என்று அவர் பதிலளித்தார். உதயநிதியும், “நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக இருக்கிறோம்” என்றார்.

அதேநேரம், உதயநிதியை துணை முதல்வராக பதவியில் அமர்த்துவதில் கட்சிக்குள் எந்தவித எதிர்ப்பும் இல்லை. அனைவரும் ஒருமித்த கருத்தில் உள்ளனர். ‘2026 சட்டமன்றத் தேர்தலின் போது, இதை ஒரு பிரசாரமாக எதிர்க்கட்சிகள் முன்வைத்துவிடக் கூடாது’ என்பதில் முதலமைச்சர் கவனமாக இருக்கிறார்.

அதனால் தான் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. அமைச்சரவையில் மாற்றத்தின் போது உதயநிதிக்கு, துணை முதல்வர் பொறுப்பு வந்து சேரும் எதிர்பார்க்கிறோம். கூடவே, மேற்கு மண்டலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஓரிரு எம்.எல்.ஏக்கள் அமைச்சரவையில் இணையவும் வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்க பயணத்திலும் இதுகுறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன” என்கிறார்.

முதலமைச்சர் தயக்கம் காட்டுவது ஏன்?

“உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு கொடுப்பதில் முதலமைச்சர் ஸ்டாலின் தயக்கம் காட்டுவது ஏன்?” என மூத்த அரசியல் விமர்சகர் ஒருவரிடம் கேட்டபோது, “துணை முதல்வர் பதவிக்கு அரசியல் அமைப்புச் சட்டரீதியாக எந்த அங்கீகாரமும் இல்லை. 2006-2011 காலகட்டத்தில் அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு காரணமாக முதுகில் அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது துணை முதலமைச்சராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். கருணாநிதி மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் கட்சியை வழிநடத்தினார்.

‘தனக்குப் பிறகு இவர் தான்’ என அடையாளப்படுத்தவே இதுபோன்ற பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி சேரலாம் எனக் கூறப்படுகிறது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தேர்தல் களத்தில் திமுகவுக்கு சவாலை ஏற்படுத்தலாம். அந்தவகையில் போட்டி கடுமையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

தற்போது வரையில் திமுக ஆட்சிக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் இல்லை. மூன்றரை ஆண்டுகால ஆட்சியில் நற்பெயருடன் இருப்பதை பெரிய விஷயமாக ஸ்டாலின் பார்க்கிறார். உதயநிதிக்கு பதவி கொடுப்பதன் மூலம் மக்கள் மத்தியில் அதையே ஒரு விமர்சனமாக எதிர்க்கட்சிகள் பேசிவிடக் கூடாது என நினைக்கிறார்.

ஆனால், சீனியர் அமைச்சர்களோ, ‘உதயநிதிக்கு புதிய பொறுப்பு கொடுக்காவிட்டாலும் வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தை அதிமுகவோ பாஜகவோ நிறுத்தப் போவதில்லை. எனவே, தாமதப்படுத்த வேண்டாம்’ எனக் கூறியுள்ளனர். இதை தனது அமெரிக்க பயணத்திலும் முதலமைச்சர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வருகின்றன.

எனவே, வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி அவர் தமிழ்நாடு திரும்பியதும் அமைஆனால், சீனியர் அமைச்சர்களோ, ‘உதயநிதிக்கு புதிய பொறுப்பு கொடுக்காவிட்டாலும் வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தை அதிமுகவோ பாஜகவோ நிறுத்தப் போவதில்லை. எனவே, தாமதப்படுத்த வேண்டாம்’ எனக் கூறியுள்ளனர். இதை தனது அமெரிக்க பயணத்திலும் முதலமைச்சர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வருகின்றன. எனவே, வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி அவர் தமிழ்நாடு திரும்பியதும் அமைச்சரவையில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dprd batam gelar sidang paripurna, laporan reses dprd kota batam masa persidangan i tahun sidang 2024. meet marry murder. ‘s copilot ai workloads.