Amazing Tamilnadu – Tamil News Updates

பண்டிகை கால சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்துக் கழகம் புதிய திட்டம்!

டப்பு வார இறுதி நாட்களை முன்னிட்டு வெள்ளி, சனி ஆகிய தினங்களில் மறுநாள் 890 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 260 பேருந்துகளும், சனிக்கிழமை 260 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று 65 பேருந்துகளும், நாளை மறுநாள் 65 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து தலா 20 பேருந்துகளும் என சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார்.

தனியார் பேருந்துகளைப் பயன்படுத்த திட்டம்

இதனிடையே தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்க தனியார் பேருந்துகளை வாடகை எடுக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கினாலும், இதுபோன்ற பயண நேரங்களில் அதிகரித்து வரும் அரசு பேருந்துகளுக்கான தேவையை சமாளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம் அதிக தேவையுள்ள நேரங்களில் தனியார் பேருந்துகளைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்தப் பேருந்துகள் சென்னை மற்றும் அருகிலுள்ள 10 மாவட்டங்களில் இயக்கப்படும். அவற்றை தனியார் ஓட்டுநர்கள் இயக்குவார்கள். இந்தத் திட்டத்திற்கான டெண்டர் விரைவில் இறுதி செய்யப்படும். இந்த பேருந்துகள் ஆண்டுக்கு 10 முதல் 15 நாட்கள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும்.

தனியார் பேருந்துகளுக்கான கட்டணம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை, கிலோமீட்டர் அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயிக்க அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். கட்டணத்தில் மாற்றம் ஏதும் இருக்காது. அரசுப் போக்குவரத்து கழகத்தின் வழித்தடத்தில்தான் பேருந்துகள் இயக்கப்படும். மேலும் பயணிகளிடையே குழப்பத்தைத் தவிர்க்க தனியார் பேருந்துகளில் விழுப்புரம் கோட்டத்தின் லோகோ இடம் பெற்றிருக்கும் எனப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version