தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 21-ல் MBBS கலந்தாய்வு… 19 ல் தரவரிசை பட்டியல்!

மிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், 21 தனியார் மருத்துவக் கல்லூரிகள், 3 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை கே.கே.நகரில் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி ஆகியவை உள்ளன. இந்தக் கல்லூரிகளில் மொத்தம் 11,500 இடங்கள் உள்ளன.

அரசுக் கல்லூரிகளில் உள்ள 5,050 எம்.பி.பி.எஸ் ( MBBS) இடங்கள் மற்றும் 250 பி.டி.எஸ் ( BDS) இடங்களில் இருந்து 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டு வழங்கப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் இருந்து 50 சதவீத இடங்கள் மாநில அரசு ஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும். எஞ்சியுள்ள 50 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக நிரப்பப்படும்.

இதில், சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் உள்ள 150 இடங்களில் மட்டும், மத்திய அரசு கொண்டு வந்த பொருளாதாரத்தில் நலிவடைந்த பொது பிரிவினருக்கான 10% (இ.டபிள்யூ.எஸ்) இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. அதேபோல, தமிழக அரசு ஒதுக்கீட்டுக்கான மொத்த இடங்களில் 7.5 சதவீதம், தமிழக அரசு கொண்டு வந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடாக வழங்கப்படுகிறது.

ஆகஸ்ட் 21 ல் கலந்தாய்வு தொடக்கம்

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அதனை சார்ந்த அரசு பள்ளி, மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. விண்ணப்பத்தை ww.tnmedicalselction.org இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆகஸ்ட் 8 மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். மத்திய அரசு நாடு முழுவதும் இந்த முதற்கட்ட கலந்தாய்வை ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் நடத்துகிறது.

ஆனால் தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21 ஆம் தேதி தொடங்க தொடங்க உள்ளது. மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் 19 ஆம் தேதி வெளியாகும். 21 ஆம் தேதி ஆன்லைன் வழியாக பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கப்படும். 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் 7.5 சதவீத அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீரர்கள் என 4 வகை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்.

அக்டோபரில் வகுப்புகள் தொடக்கம்

சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக நடத்தப்படும். எந்த இடத்தில் நடக்கும் என்ற விவரம் பின்னர் தெரிவிக்கப்படும். தமிழ்நாட்டில உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மூலம் 5050 எம்.பி.பி.எஸ். இடங்கள், ஈ.எஸ்.ஐ. கல்லூரிகள் மூலம் 3,400 இடங்கள் 3 நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் மூலம் 450 என ஆக மொத்தம் 9050 இடங்கள் உள்ளன. பல் மருத்துவ இடங்கள் 2200 உள்ளன.

இது தவிர, 6 தனியார் மருத்துவ கல்லூரிகள் புதிதாக தொடங்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளனர். புதிய மருத்துவ கல்லூரிக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் கலந்தாய்வின் போது இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு இளநிலை மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தொடங்கும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Bahas 2 agenda penting, pjs wali kota batam hadiri rapat paripurna dprd kota batam. The real housewives of beverly hills 14 reunion preview. Collaboration specifically promotes the pimax crystal light headset.